என் மலர்
நீங்கள் தேடியது "வளையல்"
- அம்மனுக்கு வளையல் அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது
- ஐந்து வகை சாதம் வழங்கப்பட்டது
கரூர்:
கிருஷ்ணராயபுரம் மஞ்ச மேடு பகுதியில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூரம் முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது. கோவிலுக்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வளையல்கள் அணிந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் வளைகாப்பு முன்னிட்டு ஐந்து வகை சாதம் வழங்கப்பட்டது. முன்னதாக எல்லையம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அர்ச்சனைகள் ஆராதனைகள் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.
- 30 ஆயிரம் வளையல்களுடன் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
- கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாலிகயிறு மற்றும் வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த கிருஷ்ண கொண்டம்மாள் கோவில் உள்ளது.
இங்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
இன்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு கிருஷ்ண கொண்டம்மாள் கோவிலில் கிருஷ்ணர் மற்றும் கொண்டம்மாள் சுவாமிகளுக்கு 30ஆயிரம் வளையல்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடந்தது.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாலிகயிறு மற்றும் வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.