search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரத்தநாடு"

    • சிவன் காட்சி அளித்ததாக வரலாறு உள்ளது.
    • சதுர வடிவ ஆவுடையார் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இன்றைய வெகுவேகமான நவீன உலகில் பெரும்பாலானவர்கள் மனக்கவலை எனும் மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். அது மாயவலைதான். ஆனால் இரும்பு திரை போல கண்ணை மறைத்து மனக்கவலையை ஏற்படுத்துகிறது.

    சரி இதுக்கு என்ன தீர்வு. துன்பம் நீங்கி, தூய மன ஓட்டத்தை ஏற்படுத்தி மனக்கவலைகளை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவராக கோனூர் நாடு அகத்தீஸ்வரர் விளங்குகிறார் என்பதுதான் அந்த சிறப்பு.

    ஒரத்தநாடு அருகே உள்ள கோனூர்நாடு கோவில்

    இந்த இடம் எங்கிருக்கு, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது கோனூர் நாடு. இங்குதான் கவலைகளை தீர்க்கும் அகத்தீஸ்வர் உள்ளார். கோவிலில் இறைவன் அகத்தீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையார் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது தனி சிறப்பு.

    சித்தர்கள் வழிபட்ட கோவில்களில் தான் இத்தகைய அமைப்பில் சிவன் காட்சி அளித்ததாக வரலாறு உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவி பெரிய நாயகி தெற்கு நோக்கியும் காட்சி அளிக்கிறார்.

    இங்கு பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரராக இறைவன் இருக்கிறார். இதன் காரணமாக பெரியநாயகி பெண்களின் மன உறுதியை மேம்பட செய்யும் தனி பண்பை தன்னகத்தை கொண்டுள்ளாள். தனது சன்னதி முன்பு மனச்சுமையோடு வந்து கண்ணீர் மல்க வேண்டும் பெண் பக்தர்களின் கவலை போக்கும் தாய் உள்ளத்தோடு பெரியநாயகி வீற்றிருந்து அருள்புரிகிறாள்.

    18 கிராம மக்கள் மட்டுமே இக்கோயிலில் வழிபட்டு வந்த நிலையில் தற்போது இக்கோயிலின் பெருமை அறிந்து முக்கியமாக மனக்கவலைகள் தீர்ப்பதை உணர்ந்து வெளி ஊர்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் இக்கோவிலில் வழிபட்டு வருகின்றனர்.

    திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 21 பிரதோஷ நாட்களில் தொடர்ச்சியாக வந்து நந்தியம்பெருமான், ஈசன், அம்பாளை வழிபாட்டால் திருமணயோகம் கிட்டும், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி ஈசன், அம்பாள், நந்தியம்பெருமானை ஒரே இடத்தில் நின்று வழிபடும் வகையில் சன்னதி அமைய பெற்றுள்ளது இக்கோயிலின் மேலும் ஒரு தனிசிறப்பு.

    சிவபெருமானின் கண்ணீரே ருத்ராட்சத்தின் தோற்றம் என சிவபுராணம் சொல்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த 5 ஆயிரம் ருத்ராட்சங்களால் அகத்தீஸ்வரர் கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவன், பெரியநாயகி அம்பாள் சன்னதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.

    • இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஒரத்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தஞ்சை சரக டி.ஐ.ஜி.கயல்விழி நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வரும் சப்- இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரத்தநாடு கடைத்தெரு அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த புதுக்கோட்டை திருக்கோர்ணத்தை சேர்ந்த சண்முகம் (வயது46), கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த செங்குட்டுவன் (43), ஒரத்தநாட்டை சேர்ந்த கார்த்திக் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து, அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன், ரூ.4700 ஆகியவற்றையும் பறிமுதல் செய்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×