என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லைட்டர்"
- எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் இறக்குமதி சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் கடைகள் என மொத்தம் 30 கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
- 4 கடைகளில் மட்டும் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமை–யில் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சேலம் புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், செவ்வாய்பேட்டை, அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர், மேட்டூர் பகுதிகளில் உள்ள கடைகளில் சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் இறக்குமதி சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் கடைகள் என மொத்தம் 30 கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில், 4 கடைகளில் மட்டும் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. அதேபோல், பழைய இரும்பு வியாபாரம் மற்றும் பழைய பேப்பர் வியாபாரம் மேற்கொள்ளும் 32 கடைகளில் ஆய்வு செய்ததில், 12 கடைகளில் விதிமீறல்கள் காணப்–பட்டன. இதைத்தொடர்ந்து மொத்தம் 16 கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.