என் மலர்
நீங்கள் தேடியது "திருடன் ஓட்டம்"
- திருச்சியில் ஸ்டேஷனரி கடையில் திருட வந்த வாலிபர், உரிமையாளர் வந்துவிட்டதால் மொபட்ைட விட்டு விட்டு தப்பிச்சென்றார்
- வாசுதேவன் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி:
திருச்சி சங்கரன் பிள்ளை சாலை பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன் (வயது 52). இவர ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த 29-ந்தேதி இரவு வாசுதேவன் கடையை பூட்டிவிட்டு அருகாமையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் பூட்டிய கடைக்குள் விளக்கு எரிவதை பார்த்த வாசுதேவன் உடனடியாக கடைக்கு திரும்பினார்.
அப்போது கடைக்குள் திருடன் இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் அவர் திருடன்..., திருடன்... என கூச்சல் போட்டார்.
உடனே கொள்ளையன் கடையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.9800 ரொக்க பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
கடை உரிமையாளர் வந்துவிட்டதால் தான் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து வாசுதேவன் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.