என் மலர்
நீங்கள் தேடியது "டி.எஸ்.பிக்கு"
- பரமத்திவேலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக சேலம் பகுதியை சேர்ந்த ராஜா ரணவீரன் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்.
- இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு டி.எஸ்.பி ராஜா ரணவீரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக சேலம் பகுதியை சேர்ந்த ராஜா ரணவீரன் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்.
அதேபோல் அனைத்து அரசியல் கட்சியினரையும், பொதுமக்களையும், வணிக நிறுவனங்களை சேர்ந்த வியாபாரிகளையும் ஒரே போல் அரவணைத்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் பரமத்தி வேலூர் பகுதிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் டி.எஸ்.பி ராஜா ரணவீரன் பணி மாறுதல் செய்யப்பட்டார்.பணி மாறுதல் காரணமாக செல்லும் அவருக்கு பாராட்டு மற்றும் வழி அனுப்பு விழா நடை பெற்றது. இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு டி.எஸ்.பி ராஜா ரணவீரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.