search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிபெருக்கு"

    • ஆடி துவங்கினால் போதும் பண்டிகைகளின் பட்டியலும் துவங்கிவிடும்.
    • ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள்தான் ஆடிப்பூரமாக கொண்டாடப்படுகிறது.

    ஆடி மாதம் தக்ஷியாயனம் ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர். ஆடி முதல் மார்கழி வரையிலான தியாயனமும், தை முதல் ஆடி வரை உத்ரானமும் ஆகும்.

    ஒன்று மழைக்காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக்காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.

    ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் துவக்கமே ஏற்படுகிறது. ஆடி துவங்கினால் போதும் பண்டிகைகளின் பட்டியலும் துவங்கிவிடும்.

    பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி மாதம்தான். அதாவது ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள்தான் ஆடிப்பூரமாக கொண்டாடப்படுகிறது.

    மேலும் ஆடிப்பதினெட்டு அல்லது ஆடிப்பெருக்கு என்றும் நாம் கொண்டாடுகிறோம். அந்த நாளில் முன்பெல்லாம் காவிரியும், தாமிரபரணியும், வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும். அதுவே ஆடிப்பெருக்காக கொண்டாடப்பட்டது.

    இந்த மாதத்தில் கிராமத்தில் காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

    இந்த ஆடி மாதத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் அம்மன் அருள்கிட்டும் என்பது நம்பிக்கை.

    • குலசேகர நங்கை அம்மன் கோவிலில் முளைப்பாரிக்கு தேவையான நவதானியங்கள் மற்றும் கும்பம் பூஜைக்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • ஆற்றில் பெண்கள் முளைப்பாரியை கரைத்தனர். இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே உள்ள குலசேகர புரத்தில் ஸ்ரீ குலசேகர நங்கை அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஸ்ரீ குலசேகர நங்கை பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நடத்தும் 5-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு குலசேகர நங்கை அம்மன் கோவிலில் முளைப்பாரிக்கு தேவையான நவதானியங்கள் மற்றும் கும்பம் பூஜைக்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

    பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. 2-வது நாளான நேற்று காலை ஆடிப்பெருக்கை முன்னிட்டு குலசேகர நங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர்10 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கு தலும் நடந்தது. மாலை யில் குலசேகரநங்கை அம்ம னுக்கு சிறப்பு வழி பாடும் அதைத்தொடர்ந்து குலசேகர நங்கை அம்மனின் பெண் பக்தர்கள் கும்பம் மற்றும் முளைப்பாரி எடுத்து வீதிகளில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக குலசேகரபுரம் லட்சுமிபுரம் சந்திப்பில் உள்ள மயான சுடலை மாடசுவாமி கோவில் அருகே உள்ள புத்தன் ஆற்று கரையை சென்றடைந்தது. அங்கு ஆற்றில் பெண்கள் முளைப்பாரியை கரைத்தனர். இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குலசேகரபுரம் ஸ்ரீ குலசேகர நங்கை அம்மன் மகளிர் பக்தர்களான சிவகாமி, வேலம்மாள், இசக்கியம் மாள் உள்பட பலர் செய்து இருந்தனர்.

    • கோவிலிகளில் வழிபாடுகள் செய்தவற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
    • ஆடி 18 அன்று குலத்தெய்வ வழிபாடு செய்வது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

     திருப்பூர் :

    ஆடிப்பெருக்கையொட்டி திருப்பூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். திருப்பூர், ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், வாலிபளையம் மகாகாளியம்மன் கோவில், முருகன் கோவில்வில்களில் காலை முதலே மக்கள் வந்து தனிசனம் செய்தனர். கோவிலிகளில் வழிபாடுகள் செய்தவற்கு ஏதுவாக ஏற்பாடு்கள் செய்யப்பட்டு இருந்தன.

    தாராபுரம் பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி 18 அன்று குலத்தெய்வ வழிபாடு செய்வது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆடிபெருக்கான இன்று தாராபுரம் அமாரவதி ஆற்றங்கரை ஈஸ்வரன் கோவில் அருகே காலை 6 மணி முதல் புத்தாடை அணிந்து வந்த பெண்கள், குழந்தைகள் பலகாரங்கள், பழங்கள், பூக்கள் வைத்து வழிப்பாடு செய்து மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். அதே போன்று பல்வேறு சமூக மக்கள் ஆற்றுக்கு வந்து குடம் மற்றும் கரகத்தில் ஆற்றின் புனித நீரை எடுத்து குடத்தில் பூக்கள் அலங்காரம் செய்து தங்களது குலந்தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு எடுத்து சென்றனர். அவினாசிலிங்கேசுவரர்கோவிலில் சுவாமிக்கு சிறப்பஅபிஷேக அலஙகார ஆராதனை நடந்தது. அதிகாலை 5 மணி முதல் அவினாசி, பழங்கரை, சேவூர், கருவலூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பெண்கள் உள்ளிட்ட திரளான பக்கர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் அனைவருககும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் அவினாசி ஆகாசராயர் கோவில், பெருமாள் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், சேவூர் வாலிசுவரர் கோவில், நடுவச்சேரி சிவா புரி அம்மன் கோவில், நல்லி கவுண்டம்பாளையம் கருப்பராயன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    உடுமலை திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காலையிலேயே திரண்டு வந்தனர். சுவாமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்ன. பஞ்சலிங்க அருவியில் புனித நீராடி அரச்சனை செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதே மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    ×