என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கண்காணிப்பு அதிகாரிகள்"
- ஆய்வின்போது கண்காணிப்பு அதிகாரிகள் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களிடம் சனிக்கிழமை நாட்களில் குறைகளை கேட்டறியலாம்.
- பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., எஸ்.ஜி.சி., ஜெ.ஆர்.சி குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும்.
சென்னை:
திருவள்ளூர் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், மாணவர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இப்படி, மற்ற பள்ளிகளில் நடந்த ஆய்வுகள் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், பள்ளிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் சங்கர் புதுக்கோட்டை மாவட்டத்திலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி செங்கல்பட்டு மாவட்டத்திலும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மதுரை மாவட்டத்திலும், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் உள்பட 30 அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். மாதத்தில் ஒருமுறையாவது பள்ளிகளில் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை மாதத் தொடக்கத்தில் 5-ந் தேதிக்குள் தவறாமல் அரசுக்கு சமர்பிக்க வேண்டும்.
ஆய்வின்போது கண்காணிப்பு அதிகாரிகள் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களிடம் சனிக்கிழமை நாட்களில் குறைகளை கேட்டறியலாம். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், அனைத்து மாணவர்களின் நலவாழ்வு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் வருகை பதிவேடு விவரங்கள் முறையாக கண்காணிக்கப்படுகிறா? என்பது குறித்தும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் காலிப்பணியிட விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களின் விளையாட்டு திறன்கள் குறித்தும், கல்வி உதவித்தொகைகள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., எஸ்.ஜி.சி., ஜெ.ஆர்.சி குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும். மாணவர்களுக்கான 14417, 1098 ஆகிய உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் ஆய்வுகள் நடத்த வேண்டும். அங்கு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்த விவரங்களை சோதனை செய்ய வேண்டும். தணிக்கை விவரங்களையும் ஆராயவேண்டும். வட்டார கல்வி அலுவலகங்களில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை விவரங்களை பரிசோதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மழை சேதங்களை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
- முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா பேச்சு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா இன்று குமரி மாவட்டம் வந்தார்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா இன்று அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொண்டார். தென்மேற்கு பருவமழை மற்றும் தற்பொழுது பெய்து வரும் மழையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆனந்தமோகன், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் மற்றும் தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வருவாய் துறை, மீன்வளத்துறை, மின்சார வாரியம், பொதுப் பணித்துறை உட்பட அனைத்து துறை அதிகாரி களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜோதி நிர்மலா பேசியதாவது-
குமரி மாவட்டத்தில் தற்பொழுது பெய்துவரும் மழை மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும்.
தற்பொழுது கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு சம்பந்த ப்பட்ட மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் உடனடியாக கரை திரும்பியுள்ளார்களா? என்பது குறித்த தகவல்களை மீன்வளத்துறை அதிகாரிகள் சேகரிக்க வேண்டும்.
மின்வாரிய அதிகாரிகள் தாழ்வான பகுதியில் உள்ள மின் கம்பங்களை கணக்கெடுத்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளில் நீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.இரவு பகலாக அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் கண்கா ணிப்பு அதிகா ரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்