என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா முதல்வர்"

    • இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு, மாநில காவல்துறையுடன் இணைந்து விசாரிக்கிறது.
    • இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ள நெட்வொர்க், முறியடிக்கப்படும்.

    பல்லாரி:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று ஆட்டோவில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில வெடிகுண்டை வெடிக்க செய்ய டெட்டனேட்டர், கம்பிகள் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்ட குக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் காயமடைந்த பயணி போலி ஆதார் அட்டை, போலியான முகவரி, போலியான பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி கோவையில் இருந்து சிம் கார்டு வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக உதகை அருகே உள்ள குந்தசப்பை கிராமத்தைச் சேர்ந்த நபரிடம் கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்நிலையில் மங்களூரு சம்பவத்தில் பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    முதற்கட்ட தகவல்களின்படி, வெடித்த பொருள் எல்இடி இணைக்கப்பட்ட கருவி என தெரிய வந்துள்ளது. சம்ப இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும், அதை எடுத்துச் சென்ற நபரின் பெயரும் வெவ்வேறானது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

    சந்தேகப்படும் நபரிடம் டூப்ளிகேட் ஆதார் அட்டை இருந்தது. அதில் ஹூப்ளி முகவரி இருந்தது. இது ஒரு பயங்கரவாதச் செயல், கோயம்புத்தூர் மற்றும் வேறு இடங்களுக்கும் அவர் பயணம் செய்துள்ளது, பயங்கரவாதத் தொடர்பைத் தெளிவாகக் காட்டுகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் புலனாய்வுப் பணியகம் (ஐபி) அதிகாரிகளும், மாநில காவல்துறையுடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கிறது..

    தேசிய புலனாய்வு அமைப்பின் 4 பேர் கொண்ட குழு, சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையுடன் ஒருங்கிணைத்து செயல்படுகிறது. சந்தேகப்படும் நபர் மருத்துவமனையில் உள்ளார். அவர் சுயநினைவு திரும்பிய பிறகு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையில் மேலும் விவரங்கள் தெரியவரும்.

    இந்த சம்பவத்தில் பரந்த நெட்வொர்க் உள்ளது, அது முறியடிக்கப்படும். தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணையில் உண்மை தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், மங்களூரு சம்பவத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதிகள் மற்றும் கர்நாடகாவில் முதல் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையான ஆனைகட்டி வரை வாகனச் சோதனையை போலீஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.

    ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்களின் உடமைகள் சோதனை செய்யப்படுகின்றன. மங்களூருவில் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • தேர்தல் போட்டியில் காங்கிரஸ் எவ்வளவு கீழ்நிலையில் உள்ளனர் என்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது என்று கூறினார்.
    • மாநிலத்தை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிக்கு இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவது தகுதியற்றது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை "பொறுப்பற்ற மற்றும் பகுத்தறிவற்றது" என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    தேர்தல் போட்டியில் காங்கிரஸ் எவ்வளவு கீழ்நிலையில் உள்ளனர் என்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

    இதுகுறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:-

    காங்கிரஸ் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி பொறுப்பற்ற மற்றும் பகுத்தறிவற்ற முடிவு. காங்கிரஸ் அவநம்பிக்கையில் உள்ளதால் அவர்கள் இதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்கள். காங்கிரஸிடமிருந்து இதுபோன்ற பல அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. விரக்தியின் காரணமாக மக்கள் அதிகமாக இலவசங்களை எதிர்பார்க்கிறீர்கள்.

    பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் விரும்புகிறது. மாநிலத்தை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிக்கு இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவது தகுதியற்றது.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலுக்குப் புதியவர் என்பதால், இதே அறிக்கையை அவர் வெளியிட்டிருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.

    காங்கிரஸ் அரசு ஆறு மணி நேரம் (ஒரு நாளைக்கு) தடையில்லா மின்சாரம் வழங்கத் தவறியபோது, அவர்களால் எப்படி இலவச மின்சாரம் வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்கிறார்.
    • பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது.

    கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர்.

    இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்-மந்திரி பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர்.

    சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுப்பதால் 4 நாட்களாக புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.

    இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

    முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்களுக்கான பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

    முன்னதாக, பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அப்போது, முதல்வர், துணை முதல்வர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்துப் பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்வர் பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுத்ததால் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.

    தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது. கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்களுக்கான பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறும் என நேற்று இரவு காங்கிரஸ் மேலிடம் தெரிவித்தது.

    இன்று காலையில் அடுத்தகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சித்தராமையா அடுத்த முதல்வர் என்றும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. டி.கே.சிவக்குமார் மாநில தலைவராகவும் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 5 நாட்களாக நிலவி வந்த மூட்டுக்கட்டை நீங்கியது.

    அடுத்து சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பதவியை பெற சில மூத்த தலைவர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அமைச்சர் பதவியை பெறுவதற்கு எம்எல்ஏக்களிடையே கடும் போட்டி இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. 

    • அரசுக்கு இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
    • எனக்குத் தெரியாது, நான் அங்கு இல்லை.

    கர்நாடகாவில் வசிக்கும் அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயணத்தை வழங்கி வரும் "சக்தி திட்டத்தை" மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

    சக்தி திட்டத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா, "அரசுக்கு அப்படி எந்த முன்மொழிவும் இல்லை. அவர் (சிவகுமார்) சில பெண்கள் சொல்வதை மட்டுமே கூறினார். எனக்குத் தெரியாது, நான் அங்கு இல்லை, நான் பேசுகிறேன்..," என்று பதில் அளித்தார்.

    பல பெண்கள் பயணத்திற்கு பணம் செலுத்த தயாராக இருப்பதாகவும், அவர்களுக்கு இலவச பயணம் வேண்டாம் என்றும் எக்ஸ் தளத்தில் டேக் செய்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியதைக் குறிப்பிட்ட சிவக்குமார், ஒரு நிகழ்வில் உரையாற்றினார்.

    அப்போது "பார்ப்போம், நாம் அனைவரும் உட்கார்ந்து விவாதிப்போம். அவர்கள் ஒரு பிரிவினர் (பெண்கள்) 5-10 சதவிகிதம் இருக்கலாம், சிலர் பணம் கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். போக்குவரத்து துறை அமைச்சரும் நானும் என்ன செய்வது என்று விவாதிப்போம்," என்று தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு செயல்படுத்திய ஐந்து உத்தரவாத திட்டங்களில் சக்தி திட்டமும் ஒன்று. இது ஜூன் 11, 2023 அன்று அரசாங்கம் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் தொடங்கப்பட்டது. அக்டோபர் 18, 2024 நிலவரப்படி, பெண்கள் 311.07 கோடி இலவச பயணங்களுக்கு சக்தி திட்டத்தில் மாநிலம் ரூ.7,507.35 கோடி செலவிட்டது.

    • சந்திரம் யெகாபகோல், IAST சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் CEO மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.
    • பூர்வீக கிராமத்தில் உடல்நலக்குறைவுடன் இருந்த தந்தையை பார்க்க சந்திரம் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தார்

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே நெலமங்களாவில் நேற்று கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேரும், பைக்கில் சென்ற ஒருவர் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    காரில் உயிரிழந்த ஐவரும் டெக் சிஇஓவான சந்திரம் யெகாபகோல்[Chandram Yegapagol] [46 வயது] மற்றும் அவரது குடும்பதினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

    சந்திரம் யெகாபகோல், IAST சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் CEO மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் பெங்களூரு HSR லே அவுட் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மோர்பாகி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரம். கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூரில் IAST நிறுவனத்தை தொடங்கினார்.

     

    சம்பவம் நடந்தபோது பல டன் எடையுள்ள அலுமினிய தூண்களை ஏற்றிச் சென்ற ஐஷர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற லாரி, பாதையை விட்டு விலகி, மீடியனைக் கடந்து சந்திரம் குடும்பத்தினர் பயணித்த வால்வோ காரின் மீது மோதியுள்ளது. காரின் லாரிக்கு அடியில் சிக்கி நசுங்கியது.

     

    தனது பூர்வீக கிராமத்தில் உடல்நலக்குறைவுடன் இருந்த தந்தையை பார்க்க சந்திரம் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தபோது இந்த சோக விபத்தானது ஏற்பட்டுள்ளது.

    • கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதியானதால், டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்க பொம்மை இன்று டெல்லி செல்லவிருந்தார்.

    கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    எனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரேனா தொற்று உறுதியானதை அடுத்து, என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்தி, உங்களைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். இதனால், எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை மற்றும் நாளை காலை 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' தேசியக் குழுவின் மூன்றாவது கூட்டத்திலும், நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்க பொம்மை இன்று டெல்லி செல்லவிருந்தார்.

    அப்போது அவர், பாஜகவின் தேசியத் தலைமையைச் சந்தித்து மாநிலத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் 2023 சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ×