search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபோன் 14"

    • ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.
    • ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைப்பு.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை சில தினங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 13 போன்ற மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக குறைத்து இருக்கிறது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பு ஐபோன்களின் 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்களுக்கு பொருந்தும்.

     

    புதிய விலை விவரங்கள்:

    ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 59 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 99 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 10 ஆயிரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விலை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் ஆன்லைன் வலைதளத்துக்கானது ஆகும். எனினும், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன் மாடல்களை இதைவிட குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதுதவிர ஆன்லைன் வலைத்தளங்களில் சிறப்பு விற்பனையின் போது கூடுதல் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    • ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
    • ஆப்பிள் சேல் டேஸ் பெயரில் அமேசான் வலைதளத்தில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

    அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐபோன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் தளத்தில் அவ்வப்போது ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போதைய சிறப்பு விற்பனை ஜூன் 11 ஆம் தேதி துவங்கியது. இந்த விற்பனை ஜூன் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தள்ளுபடி மட்டுமின்றி, வட்டியில்லா மாத தவணை முறை சலுகை, தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சலுகை விவரங்கள்:

    ஐபோன் 14 (128 ஜிபி) 15 சதவீத தள்ளுபடியின் கீழ் ரூ. 67 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 79 ஆயிரத்து 999 ஆகும். இதன் 256 ஜிபி மாடலுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி இந்த வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 77 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. 512 ஜிபி மாடல் விலை 1 லட்சத்து 09 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது 11 சதவீத தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 97 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி) மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 76 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதன் 256 ஜிபி மாடல் விலை ரூ. 86 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது. இந்த வேரியண்டிற்கு 13 சதீவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என பல்வேறு ஐபோன்களை விறப்னை செய்து வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலின் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட்களின் விலை தள்ளுபடி செய்யப்பட்டு முறையே ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது.

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 990 என்றும் மாறி இருக்கின்றன.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடலில் கிராஷ் டிடெக்‌ஷன் அம்சம் சரியான நேரத்தில் கணவருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பி இருக்கிறது.
    • ஐபோன் 14, வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல்களில் கிராஷ் டிடெக்‌ஷன் கொடுக்கும் மேம்பட்ட சென்சார்கள் உள்ளன.

    ஐபோன் 14 மாடலின் கிராஷ் டிடெக்‌ஷன் அம்சம் நபர் ஒருவருக்கு தனது மனைவி விபத்தில் சிக்கிய தகவல் கொடுத்தது. இதையடுத்து கணவர் சரியான நேரத்தில் விபத்து பகுதிக்கு விரைந்ததால், மனைவி உயிர்பிழைத்தார். இதுபற்றிய தகவல் ரெடிட் தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. மனைவியுடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது அவர் விபத்தில் சிக்கி இருக்கிறார்.

    கடைவீதிக்கு சென்றிருந்த மனைவி, காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது தனது கணவருடன் போனில் பேசிக் கொண்டே வந்திருக்கிறார். அப்போது, திடீரென கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி விபத்தில் சிக்கியதால் அலறி இருக்கிறார். இதோடு அவரின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. போன் அழைப்பு துண்டிக்கப்பட்ட சில நொடிகளில் கணவருக்கு மனைவியின் ஐபோனில் இருந்து நோட்டிஃபிகேஷன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

    நோட்டிஃபிகேஷனில் மனைவி இருக்கும் இடத்தின் சரியான லொகேஷன் இடம்பெற்று இருந்தது. நோட்டிஃபிகேஷனை பார்த்து விபத்து பகுதிக்கு கணவர் விரைந்து சென்றிருக்கிறார். ஆம்புலன்ஸ் வரும் முன் சம்பவ இடத்திற்கு கணவர் விரைந்து சென்றிருக்கிறார். கிராஷ் டிடெக்‌ஷன் அம்சம் எமர்ஜன்சி SOS மூலம் முதலில் தொடர்பு கொள்ளப்பட வேண்டியவருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்புகிறது.

    ஹெல்த் ஆப்-னுள் பயனர்கள் எமர்ஜன்சி காண்டாக்ட்களை சேர்க்க முடியும். ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களில் கிராஷ் டிடெக்‌ஷன் அம்சத்தை வழங்கும் மேம்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் சாதனத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு பயனருக்கு ஏற்படும் ஆபத்துக்களை கண்டறிந்து செயல்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்து விட்டது.
    • மேலும் புது ஐபோன்களின் இந்திய விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. இரு மாடல்களிலும் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐபோன் 12 சீரிசில் அறிமுகம் செய்யப்பட்ட செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 12MP பிரைமரி கேமரா, முன்புறம் புதிய ட்ரூ டெப்த் கேமரா, அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புது ஐபோனின் ஒவ்வொரு கேமரா லென்சிலும் அதிகளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதே போன்று வீடியோ சீராக காட்சியளிக்க செய்யும் வகையில் புதிதாக ஆக்‌ஷன் மோட் வழங்கப்பட்டு உள்ளது.


    ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள்:

    6.1 இன்ச் 2532x1170 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே - ஐபோன் 14

    6.7 இன்ச் 2778x1284 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே - ஐபோன் 14 பிளஸ்

    6-கோர் ஏ15 பயோனிக் பிராசஸர்

    128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்

    ஐஒஎஸ் 16

    வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)

    டூயல் சிம்

    12MP வைடு ஆங்கில் கேமரா

    12MP அல்ட்ரா வைடு இரண்டாவது கேமரா

    12MP செல்பி கேமரா

    முக அங்கீகார வசதி வழங்க ட்ரூ டெப்த் கேமரா

    5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    லித்தியம் அயன் பேட்டரி

    பாஸ்ட் சார்ஜிங் வசதி

    புதிய ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் மிட்நைட், பர்பில், ஸ்டார்லைட், புளூ மற்றும் பிராடக்ட் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    ஐபோன் 14 (128 ஜிபி) ரூ. 79 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜிபி) ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜிபி) ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி) ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜிபி) ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜிபி) ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900

    புதிய ஐபோன் 14 சீரிஸ் இந்திய முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. ஐபோன் 14 விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதியும் ஐபோன் 14 பிளஸ் விற்பனை அக்டோபர் 7 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது ஐபோன் சீரிஸ் மாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

    ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, புதிய ஐபோன் மாடல்கள் வெளியீட்டின் போதே உற்பத்தியும் துவங்கி விடும் என தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னணி ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் தனது ஐபோன் 14 உற்பத்தியை சீனாவில் துவங்கும் போதே இந்திய சந்தையிலும் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார். சீனா மற்றும் இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தி இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்குகிறது.


     புது ஐபோன்கள் வெளியீட்டை தொடர்ந்து இந்திய உற்பத்தியும் துவங்க இருப்பது இதுவே முதல் முறை ஆகும். வழக்கமாக புது ஐபோன் வெளியான இரு காலாண்டுக்கு பின்பு தான் இந்தியாவில் அதன் உற்பத்தி துவங்கும். புதிய ஐபோன் 14 மாடல்களின் உற்பத்தி தமிழ் நாட்டில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கையின் படி ஆப்பிள் நிறுவன வருவாய் இந்தியாவில் இருமடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தான் ஆப்பிள் தனது புது ஐபோன்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்ய முடிவு எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் போது புது ஐபோன்களின் விலை கணிசமாக குறையவும் வாய்ப்புகள் உண்டு.

    தற்போதைய தகவல்களின் படி புதிய ஐபோன் 14 மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரத்து 200 முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்யலாம். இவை அனைத்திலும் 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    ×