search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவருக்கு"

    • குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

    திருவட்டார்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் மேக்காமண்டபம் சந்தை பகுதியில் வயதான முதியவர் ஒருவர் மழையில் நனைந்தபடி உடலில் சாக்குப்பையை சுற்றியபடி படுத்திருந்தார். அவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

    இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஜோன், தனது நண்பர்களுடன் அங்கு வந்து, முதியவருக்கு உணவு, புதிய ஆடை வழங்கினர். அவர் வாய்பேச முடியாதவர் என்பதால், அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. தொடர்ந்து அவரை பிலாங்காலை பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். 

    • பெண்ணை வெட்டிக் கொன்ற வழக்கில்
    • முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள சேவாப்பூரைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 55) இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி என்கிற மணி நாயக்கருடன் (72) கூடா நட்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியம்மாளின் தங்கை மகன் 2 ஆண்டுகளாக பழனியம்மாள் வீட்டில் தங்கி ேவலைக்கு சென்று வந்துள்ளார். இது ராமசாமிக்கு பிடிக்காததால் பழனியம்மாளைக் கண்டித்துள்ளார்.

    இதை தொடர்ந்து கடந்த 2021 ஆகஸ்ட் 3-ந்தேதி பழனியம்மாளின் வீட்டுக்கு ராமசாமி வந்துள்ளார். இதற்கு பழனியம்மாள் எதிர்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராமசாமி அரிவாளால் பழனியம்மாளை வெட்டிக் கொலை செய்தார். இது குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு கரூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து நீதிபதி நசீமாபானு நேற்று தீர்ப்பளித்தார்.

    இதில் பழனியம்மாளை ஆபாசமாக திட்டியதற்காக ராமசாமிக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை ரூ.100 அபராதம், கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் சிறைததண்டனை ரூ.100 அபராதம், அதை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை விதித்து இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். 

    ×