என் மலர்
நீங்கள் தேடியது "டிக்டாக்"
- டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன
- ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார்.
அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப்படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், டிக்டாக்கை அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் ஜனவரி 19-ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும். இல்லையெனில் டிக்டாக்கைத் தடை செய்யப்படும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது.
அதன்படி டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் இன்று [ஜனவரி 19] முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை தாற்காலிகமாக நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நாளை அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் டிக் டாக் தடையை விரும்பவில்லை என்று தெரிகிறது.
அதிபர் டிரம்ப் பதவியேற்றவுடன் டிக் டாக்கை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வோம். டிரம்ப் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது என்று டிக் டாக் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனமும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பதவியேற்றதும் டிரம்ப், பைட்டான்ஸ் நிறுவனம் டிக் டாக்கை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க மேலும் 90 நாட்கள் அவகாசம் வழங்குவார் என்று கூறப்படுகிறது. அல்லது வேறு வழிகளில் டிக் டாக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர ஆவண செய்வார் என்று டிரம்ப் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- டிக் டாக் செயலி தடைபட்டால் அதை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும்.
- அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இயற்றினார்.
அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் நேற்று [ஜனவரி 19] முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக் டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியது.
அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அளித்துள்ள உறுதியைத் தொடர்ந்து மிண்டும் சேவையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
- நவநாகரிக உடைகள் அணிந்து டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாக இருந்துள்ளார்.
- பரிசோதித்த டாக்டர்கள் ஹீரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானை சேர்ந்தவர் அன்வரூல் ஹக். இவருக்கு திருமணமாகி ஹீரா (வயது 15) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறி குடியுரிமை பெற்று 28 ஆண்டுகளாக வசித்து வருகிறார். சிறுமி ஹீரா அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்துள்ளார்.
ஹீரா தனது செல்போனில் பிரபல சமூக வலைத்தள செயலியான டிக்டாக்கை பதிவிறக்கம் செய்து அதில் வீடியோ வெளியிட்டு நேரம் செலவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நவநாகரிக உடைகள் அணிந்து டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாக இருந்துள்ளார்.
ஹீராவின் இந்த நடவடிக்கையை அன்வரூல் ஹக் கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் ஹீரா டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. சில நாட்களுக்கு முன்பு அன்வரூல் ஹக் தனது மகள் ஹீராவுடன் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு வந்திருந்தார். பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் உள்ள பூர்வீக வீட்டில் ஹீராவுடன் அன்வரூல் ஹக் தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று அன்வரூல் ஹக் வீட்டினுள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பக்கத்து வீட்டினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அங்கே வீட்டு முற்றத்தில் ஹீரா உடலில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். சிறுமியை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஹீரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்தான விசாரணையில் அன்வரூல் ஹக் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் தனது மகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றதை ஒத்து கொண்டுள்ளார். சிறுமி ஹீரா தொடர்ந்து டிக்டாக் பயன்படுத்தி வந்ததால் அவரை திட்டமிட்டு கொலை செய்வதற்காகவே அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு கூட்டி வரப்பட்டது தெரிந்தது. இதனை தொடர்ந்து அன்வரூல் ஹக் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பெண்கள் ‘டிக் டாக்’ மூலம் பாடுவது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பலருடன் பழக்கம் ஏற்படுகிறது. இது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது.
திருவனந்தபுரம்:
சமூக வலைதளங்களில் இன்று பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக 'டிக்டாக்' வலைதளம் மூலம் 'யூ-டியூப்'பில் தங்கள் திறமைகளை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் சிலர் அதனை தவறாக பயன்படுத்தி வருவது தான் வேதனையான விஷயம். பெண்கள் 'டிக்டாக்' மூலம் பாடுவது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பலருடன் பழக்கம் ஏற்படுகிறது. இது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது.
இது போல ஆபத்தில் சிக்கி வாழ்வை இழந்துள்ளார் கேரள கல்லூரி மாணவி ஒருவர். இது பற்றிய விவரம் வருமாறு:-
திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் வினீத் (வயது 25). இவர் கேரளாவில் பிரபலமான 'டிக்டாக்' நடிகராக உள்ளார். இவர் 'டிக்டாக்'கில் எந்த வீடியோ வெளியிட்டாலும் அது சில நிமிடங்களிலேயே பெரிதாக வைரலாகிவிடும்.
இதனால் இவரது 'டிக்டாக்' கிற்கு மவுசு அதிகம். குறிப்பாக கல்லூரி மாணவிகள், பெண்கள் இவருக்கு ரசிகைகளாக உள்ளனர். அந்த வகையில் கல்லூரி மாணவி ஒருவர், வினீத்துக்கு நெருக்கமாகி உள்ளார். இருவரும் அடிக்கடி 'வீடியோ கால்' மூலம் பேசி வந்துள்ளனர்.
அப்போது மாணவிக்கு தெரியாமல் அவரை ஆபாசமாக வினீத் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் 'டிக்டாக்'கில் பிரபலமடைவது எப்படி? என சொல்லித் தருகிறேன் என மாணவியிடம் கூறிய வினீத், அவரை திருவனந்தபுரம் வருமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பிய மாணவியும் திருவனந்தபுரம் வந்தார். மாணவியை சந்தித்த வினீத், தான் கார் வாங்கப் போவதாகவும் அதற்கு உடன் வரும்படியும் கூறினார். மேலும் முகத்தை கழுவி விட்டு புத்துணர்ச்சியுடன் செல்லலாம் என லாட்ஜிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியிடம், தான் வைத்திருந்த அவரது ஆபாச படங்களை காட்டியுள்ளார். இதனை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். அந்த படங்களை காட்டி மாணவியை மிரட்டி வினீத் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையில் வினீத்தின் செல்போனை, மாணவி பார்த்த போது பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தம்பானூர் போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து வினீத்தை கைது செய்தனர்.
அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் மேலும் பல பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசாரிடம் வினீத்தின் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட வினீத், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வினீத் சிறையில் அடைக்கப்பட்டார்.