search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராக்கி கயிறு"

    • மஹபூபாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வந்தார்.
    • திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்ணிற்கு ஒரு நபர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வந்தார்.

    தெலுங்கானாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண்ணிற்கு ஒரு நபர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வந்தார்.

    இதனால மனஉளைச்சலுக்கு உள்ளான அப்பெண் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை காப்பாற்றிய குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அப்பெண் ஆகஸ்ட் 17 ஆம் தேதி உயிரிழந்தார். தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது 2 தம்பிகளுக்கு அப்பெண் ராக்கி கயிறு கட்டினார். இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், அப்பெண்ணிற்கு தொல்லை கொடுத்தவர்களை தேடி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து சென்றவர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது.
    • நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து சென்றவ–ர்களுக்கும், போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றியவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை காவல்–துறை யினர் பொதுமக்களின் நண்பன் என்ற கூற்றை பறைசாற்றும் விதமாக தேசிய நண்பர்கள் தினம் தஞ்சை அண்ணா சிலை பகுதியில் தஞ்சை ஜோதி அறக்கட்டளையினர் மற்றும் தஞ்சை போக்கு வரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து சென்றவர்களுக்கும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து சென்றவ–ர்களையும் போக்குவரத்து விதிகளை முறைப்படி பின்பற்றியவர்களிடம் தேசிய நண்பர்கள் தினத்தை போற்றும் வகையில் இனிப்பு வழங்கி கையில் ராக்கி கயிறு கட்டியும் பொதுமக்களிடம் நூதன முறையில் நட்பு பாராட்டினர் .

    தஞ்சை போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்தி ரனின் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் , போக்குவரத்து துணை ஆய்வாளர் பாஸ்கரன் , சிறப்பு துணை ஆய்வாளர் ரமேஷ், ஏட்டு புவனேஸ்வரி, போக்குவரத்து போலீசார் நாகராணி , தனலக்ஷ்மி , தேன்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×