search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்"

    • காவிரி பாசன ஆறுகள், வடிகால்கள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்படும்.
    • வன விலங்குகளிடமிருந்து பயிற்களை காக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச்செடி தொகுப்பு விநியோகத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட 10 பொருட்கள் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தூர் வெள்ளரி, மதுரை செங்கருப்பு, விளாத்திக்குளம் மிளகாய் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடலூர் கோட்டிமுறை கத்தரி, பேராவூரணி தென்னை, வீரமாங்குடி அச்சுவெல்லம் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை கருப்பு கவுணி அரிசி புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரூ.9 கோடி செலவில் 25 உழவர் சந்தைகள் மேம்படுத்த ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    பூச்சிகள் அருங்காட்சியகத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பூச்சிகளை பற்றிய புரிதல் இருந்தால் தான் அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

    ரூ.14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும்.

    காவிரி படுகை பெருந்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    காவிரி பாசன ஆறுகள், வடிகால்கள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்படும்.

    நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு பொது ரகத்திற்கு ரூ.75, சன்ன ரகத்திற்கு ரூ.100 கூடுதலாக வழங்கப்படும்.

    25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சிறுதானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

    யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பயிற்களை காக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்படும்.

    23 லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.6,536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மண் வளம் குறித்து விவசாயிகள் அறிய அனைத்து விவரமும் கணினி மயமாக்கம் செய்யப்படும்.

    அனைத்து மாவட்ட விவசாயிகள் எண்ணிக்கை, சாகுபடி விவரம் மின்னணு முறையில் சேகரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் ஏற்காடு தாவரவியல் பூங்காவை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்கா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தண்ணீர் பற்றாக்குறை பகுதியில் நுண்ணீர் பாசன முறையை நிறுவுவதற்கு மானியம் வழங்க ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சேலம் ஏற்காடு தாவரவியல் பூங்காவை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    டிராகன், பேரீச்சை, ஆலிவ் போன்ற சிறப்பு பயிர்களின் பரப்பை விரிவாக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்கா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் செய்யப்படும்.

    விவசாயிகளை வெளிநாடு அழைத்துச்செல்ல புதிய திட்டம் கொண்டு வரப்படும். வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் அயல்நாட்டில் பயிற்சி மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    ரூ.130 கோடியில் தேனியில் வாழை உற்பத்தி திட்டம் கொண்டு வரப்படும்.

    விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்.

    உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்க தனி தொகுப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

    விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி உயர் விளைச்சல் ரக செடிகளை 500 ஏக்கரில் நடவு செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பள்ளி மாணவர்களுக்கான பண்ணை சுற்றுலா திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    பண்ணை குடும்பங்களுக்கு பழச்செடி தொகுப்பு விநியோகம் செய்ய ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஈரோடு கீழ் பவானியில் ஒருங்கிணைந்த நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பருத்தி உற்பத்தியை 4 லட்சத்து 50 ஆயிரம் டன்னாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மல்லிகை பயிர் வேளாண் முறையை விவசாயிகளுக்கு கற்றுத்தர ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தென்னை உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.

    விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் இடுபொருட்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை.

    புரதச்சத்து வழங்கும் பயறு வகைகளின் பரப்பளவு, உற்பத்தியை அதிகரிக்க ரூ.30 கோடியில் பயறு பெருக்குத் திட்டம்.

    மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பருத்தி உற்பத்தியை 4 லட்சத்து 50 ஆயிரம் டன்னாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ள வட்டியில்லா கடன் உதவி வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    கோவையில் கறிவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்.

    சேலம், அமராவதி சர்க்கரை ஆலை கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்களை பாதுகாக்கும் திட்டத்திற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    3-4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படும்.

    கருவேப்பிலை சாகுபடியை 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மல்லிகை பயிர் வேளாண் முறையை விவசாயிகளுக்கு கற்றுத்தர ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழகத்தின் 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்தும் திட்டத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழகத்தின் 7 மாவட்டங்களில் முருங்கை சாகுபடியை உயர்த்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மிளகாய் மண்டலம் அறிவிக்கப்படும்.

    தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கைக்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சம்பா நெல் அறுவடைக்கு பின் சிறுதானியங்கள், பயறு உள்ளிட்ட சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்.
    • உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

    வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.

    சம்பா நெல் அறுவடைக்கு பின் சிறுதானியங்கள், பயறு உள்ளிட்ட சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்.

    உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைப்பதற்கு நிதி ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவித்த வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும்.

    பருவத்திற்கேற்ற பயிர், தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர ரூ.205 கோடியில் கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்.

    எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடியில் சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவ ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்டங்களில் 14,500 ஹெக்டேரில் 725 தொகுப்புகள் உருவாக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

    கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

    சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் நிதி வழங்கப்படும்.

    வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவ ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மக்களிடையே சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்.

    நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு கருவிகள் விநியோகிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

    அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்டங்களில் 14,500 ஹெக்டேரில் 725 தொகுப்புகள் உருவாக்கப்படும்.

    சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 25 மாவட்டங்களில் முதல்வரின் சிறுதானிய இயக்கம் செயல்படுத்த ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • விளைப்பொருட்களை உலர வைத்து சேமிக்க வசதியாக 253 உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு களங்கள் கட்டப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

    சிறு தானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

    2504 கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    25 மாவட்டங்களில் முதல்வரின் சிறுதானிய இயக்கம் செயல்படுத்த ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மாற்று பயிர் சாகுபடிக்கு 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    ரூ.50 லட்சம் நிதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    சிறுபாசன கடைமடைகள் தூர்வாரப்பட்டு பாசன நீர் கடைமடை வரை செல்ல வழிவகை செய்யப்படும்.

    விளைப்பொருட்களை உலர வைத்து சேமிக்க வசதியாக 253 உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு களங்கள் கட்டப்படும்.

    அங்கக வேளாண்மை ஊக்குவிக்க பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 33 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பயிர் காப்பீடாக ரூ.1065 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால்தான் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும்.

    2021-22ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் மானியம் வழங்கப்பட்டது. வேளாண் பட்டதாரிகள் மூலம் அக்ரி கிளினிக் ஏற்படுத்தப்பட்டு வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன.

    பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 33 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.

    127 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேளாண்மையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பது அல்ல, மனிதர்களை பண்படுத்துவது.
    • டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பச்சை துண்டு அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அவர் பேசியதாவது:

    வேளாண்மையை தொன்று தொட்டு கடைபிடித்து வருவதாக இலக்கியங்கள் கூறுகிறது. இயற்கையோடு நடத்துகின்ற கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை ஆகிவிட்டது.

    விவசாய நிலங்கள் குறைந்து வரும் காலத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.

    வேளாண்மை என்பது பணி அல்ல, வாழ்க்கை முறை. தானியங்கள் மட்டுமல்ல, காய்கறி, பழங்களையும் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய சவாலாக உள்ளது.

    உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. வேளாண்மையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பது அல்ல, மனிதர்களை பண்படுத்துவது.

    நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு. ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

    டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இயங்காமல் உள்ள சர்க்கரை ஆலைகளை இயக்கிட குழு அமைப்பு.
    • கரும்பு அரவைப் பருவத்திற்கான முன்னேற்பாடு குறித்து அமைச்சர் ஆய்வு.

    வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனம், சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேசிய அமைச்சர், எதிர்வரும் 2022-23 அரவை பருவத்திலேயே முதலாவதாக எம்.ஆர்.கே, கள்ளக்குறிச்சி-1 மற்றும் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தியினை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மீதமுள்ள சுப்ரமணிய சிவா, சேலம் மற்றும் நேஷனல் ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 2023-24 ஆம் அரவை பருவத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

    அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை கரும்பு விவசாயிகளிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், எத்தனால் மற்றும் இணை மின் உற்பத்தி மூலம் ஆலைகளை லாபகரமாக இயக்கிடும் வகையில் உரிய திட்டங்களை வகுத்து செயல்படுத்திட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    ஆலைகளுக்கு தேவையான கரும்பு உற்பத்தியை மேம்படுத்த கரும்பு நடவு பரப்பளவு பெருக்கம் மற்றும் எதிர்வரும் அரவைப்பருவத்திற்கான முன்னேற்பாடு நடவடிக்கைக்கைகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

    அரசு வழிவகைக்கடன் விரைவில் வழங்கப்பட்டு கரும்பு நிலுவைத்தொகை உடனடியக வழங்கிட துரித நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும், இயங்காமல் உள்ள சர்க்கரை ஆலைகளை இயக்கிட அரசினால் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

    ×