search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியுறவுத்துறை அமைச்சர்"

    • மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி உயிரிழப்பு.
    • தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வலியுறுத்தப்பட்டது.

    இலங்கை கடற்படையினரின் ரோந்துப்படகு மோதி ராமநாதபுரம் மீனவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வரவும், காயமடைந்த மீனவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வலியுறுத்தப்பட்டது.

    இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அத்துடன் உயிரிழந்த மீனவர் மலைச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், உயிரிழந்த மீனவர் மலைச்சாமி அவர்களது உடலை உடனடியாக தாயகம் கொண்டுவரவும், காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி, அவர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1-8-2024) கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், கடந்த 31-7-2024 அன்று, IND-TN-10-MM-73 என்ற பதிவுவெண் கொண்ட இந்திய மீன்பிடிப் படகின் மீது இலங்கைக் கடற்படையினரின் ரோந்து படகு

    மோதிய துயர சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும், வேதனையையும்

    வெளிப்படுத்தியுள்ள முதலமைச்சர், இத்துயர சம்பவத்தில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர் என்றும், ஒரு மீனவரை காணவில்லை என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    இதுபோன்ற நிகழ்வுகளில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இச்சம்பவம் மீனவ சமூகத்தினரை மிகுந்த சோகத்தில்

    ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின்

    கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர், இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இரண்டு மீனவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கை அதிகாரிகளின் வசம் இந்த இரண்டு மீனவர்களும் உள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கிடவும், போதிய மருத்துவ வசதிகளையும் வழங்கிடவும் கேட்டுக் கொண்டுள்ளதோடு, அவர்களை மிக விரைவில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நமது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி மேற்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல்கள், மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் உள்ளதாகவும், இதனை கடந்த காலங்களில் பலமுறை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, இந்த விஷயத்திற்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்து, தூதரக நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வு காணப்படும் என தான் நம்புவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
    • பாஜக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சனையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுவிக்கவும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், சமீப வாரங்களில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் கவலைபடத் தெரிவித்துள்ளதோடு, IND-TN-10 MO 1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்களைக் கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும் இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படருகளிலும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் 1-7-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    1974 ஆம் ஆண்டிலிருந்தே, அப்போதைய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை நிலவுவதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தனது 27-6-2024 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை கோடிட்டுக் காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், தி.மு.க. தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இது சம்பந்தமாக மாநில அரசடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்திய உரிமைகளுக்கும் நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்பொதைய ஒன்றிய அரசு தான் என்று தனது கடிதத்தில் அழுத்தத்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தனது தலைவரும் அப்போதைய தி.மு.க. தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தூக்கல் செய்து, அதில் 'ஒன்றிய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்கு முரணானதாக இருக்கும்போது. கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதலமைச்சரி அவர்கள் நமது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

    தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சனையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் . தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தாத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் எனத் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வலையில் மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரக்கினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைக்கர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் கடந்த 22.06.2024 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள். IND- TN-10-MM-84, IND-TN-10-MM-88 IND-TN-10-MM-340 எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார்.

    எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • நமது மீனவர்கள் பல தலைமுறைகளாக நமது நாட்டிற்கு அருகே உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர்
    • சமீபகாலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும். கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (11-3-2004) கடிதம் எழுதியுள்ளார்

    அக்கடிதத்தில், "இலங்கைக் கடற்படையினர் 10.03 2024 அன்று இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 3 மீன்பிடி விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளதோடு, 22 மீனவர்களை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டு இது நமது நாட்டு மீனவர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம் என்பதால் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட வேண்டும்.

    நமது மீனவர்கள் பல தலைமுறைகளாக நமது நாட்டிற்கு அருகே உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர் என்றும் மீன்பிடித் தொழில்தான் அவர்களது வாழ்வாதாரமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். சமீபகாலமாக அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும். கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் அதிகரித்து வருவதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார் இத்தகைய கைது நடவடிக்கைகள் பாதிக்கப்படும் மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.

    எனவே உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு. மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாகவும். தீர்க்கமாகவும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறை.
    • மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை வேண்டும்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14-01-2024) கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், 13.01.2024 (நேற்று) நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்விவகாரத்தை இலங்கை அரசுடன் உரிய தூதரக வழிமுறைகள் மூலம் எடுத்துச் சென்று இலங்கை சிறையில் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • குமரி மாவட்ட மூன்று மீனவர்கள், இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
    • கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் அரசு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

    டெல்லி:

    கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீட்பு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

    வெளிநாட்டு சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் துயரங்கள் குறித்து தெரிவித்த அவர், கடலில் மீன் பிடிக்க செல்லும்போது வழி தவறி அந்நிய நாட்டு கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்வதை அவர் எடுத்துரைத்தார்.

    குறிப்பாக இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை அரசு தலையிட்டு விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சிறையில் இருந்த போது ஒரு மீனவர் உயிரிழந்ததையும் மற்றும் மீனவர்களின் படகுகள் மற்றும் பொருட்கள் அந்த அரசின் வசம் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

    இத்தகைய கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் தூதரக ரீதியான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அத்தகைய பேச்சு வார்த்தைகளின் போது கடலோர பாராளுமன்ற தொகுதிகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து கருத்து கேட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மீனவர்கள் வேலைக்கு சேர்ந்தவுடன் அவர்களது பாஸ்போர்ட்களை வேலை செய்யும் நிறுவனங்கள் பிணையாக எடுத்துக் கொள்வதை சுட்டிக்காட்டிய விஜய்வசந்த் எம்.பி., மீனவர்கள் நாடு திரும்ப விரும்பும் போது பாஸ்போர்ட் கிடைக்காமல் தவிப்பதாக கூறினார்.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த எட்டு மீனவர்கள் ஓமன் நாட்டில் இத்தகைய சந்தர்ப்பத்தில் சிக்கி அலை கழிக்கப்படுவதையும் அப்போது அவர் தெரிவித்தார்.  இந்திய தூதரகங்கள் இந்த விஷயங்களில் தலையிட்டு மீனவர்களை உடனடியாக இந்தியாவிற்கு பத்திரமாக திருப்பி அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

    ×