என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலந்தாய்வுக் கூட்டம்"
- கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் சரியான முறையில் வந்து சேரவில்லை.
சின்னமனூர்:
தேனி மாவட்ட ஜெய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் சின்னமனூர் ராமகிருஷ்ண சேவாஸ்ரமம் மடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் சரியான முறையில் வந்து சேரவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நிறுவனதலைவர் ரவி தலைமை தாங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்டோர்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது குறைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் சிறப்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.
- போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி கொடுக்கப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி, தனியார் பள்ளி வளாகத்தில் இயங்கிவரும் தருமபுரி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெகடர் சாந்தி பேசும்போது தெரிவித்ததாவது:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2021 அக்டோபர் மாதத்திலிருந்து மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர். இந்த அரசு மாதிரிப்பள்ளியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் வசதிக்காக சிறந்த வகுப்பறை வசதி, தங்கும் விடுதி வசதி, சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் மூலம் சிறப்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அரசின் பல்வேறு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் சிறப்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.
இதில் பயிலக்கூடிய மாணவ, மாணவியர்கள் சிறப்பான கல்வி மற்றும் தேவையான பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் தேசிய அளவிலான பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ளனர். பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி கொடுக்கப்படுகிறது.
எனவே அனைத்துத் தரப்பு மாணவர்களும் மாதிரிப் பள்ளியில் சேர்வதன் மூலம் பயன்களைப் பெற முடியும். இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தில் சிறந்த இடத்தை அடைவதற்கு சிறப்பான கல்வியை கற்க வேண்டும். இதற்கு பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலர் இரவிச்சந்திரன், பள்ளியின் தலைமையாசிரியர் சக்திவேல், முதுகலை கணித ஆசிரியர் பாலமுருகன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி வேண்டுகோள்
- கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடன் உதவிகளை வழங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்திற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜா மைதீன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில்:-
தமிழ்நாடு முதல் அமைச்சர் தலைமையிலான அரசின் மூலமாக பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதார முன்னேற்றத்திற்காக குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.
அதனை பெற பயனாளிகள் வரும் போது அவர்களை துறை சார்ந்த அலுவலர்கள் அலைக்கழிக்க கூடாது. நடப்பு நிதி ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாப்செட்கோ மூலம் ரூ.ஒரு கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்து பேசினார் .
பின்னர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிக கடன்கள் பெற்று தொழில் செய்து வரும் சோளிங்கர் தாலுகா, கன்னிகாபுரம் மகளிர் சுய உதவி குழுக்களை சந்தித்து தொழில் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கோமதி, தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக பொது மேலாளர் லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி உள்பட பலர் உடன் இருந்தனர்.

- உணவு அருந்திய பின்னா் வழங்கப்படும் பில்லில் சேவை வரி விதிக்கக் கூடாது என்று சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
- சேவை வரி விதிக்கக் கூடாது தொடா்பான உரிய வழிகாட்டுதல்கள் தெரியப்படுத்தப்படவுள்ளன.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உணவகங்களில் உணவு அருந்திய பின்னா் வழங்கப்படும் பில்லில் சேவை வரி விதிக்கக் கூடாது என்று நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019 உட்பிரிவு 18 (2) (1)- இன்படி கடந்த ஆகஸ்ட் 4 ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் சேவை வரி விதிக்கக் கூடாது தொடா்பான உரிய வழிகாட்டுதல்கள் தெரியப்படுத்தப்படவுள்ளன. இது தொடா்பான கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.