search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொல்லார்ட்"

    • இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவிலும் டி20 தொடர் 'எஸ்ஏ20 லீக்' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
    • இந்த தொடரின் 2-வது சீசன் வரும் 10-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 10-ம் தேதி வரை நடக்க உள்ளது.

    இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவிலும் டி20 தொடர் 'எஸ்ஏ20 லீக்' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே அணிகளை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயன்ட்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் முதலாவது சீசன் கடந்த ஆண்டு முடிவடைந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் கோப்பையை வென்றது.

    இந்த தொடரின் 2-வது சீசன் வரும் 10-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 10-ம் தேதி வரை நடக்க உள்ளது. 6 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர்கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் கடந்த சீசனில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரஷித் கான் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகி உள்ளார். இதன் காரணமாக எம்.ஐ. கேப்டவுன் அணியின் புதிய கேப்டனாக பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.
    • ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியை கண்டது. அதற்கு அடுத்த சர்வதேச தொடராக ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது.

    இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் காலிறுதி ஆட்டத்துக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

    இந்நிலையில் இங்கிலாந்து டி20 அணிக்கு ஆலோசகர் பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமோ அல்லது பொல்லார்ட் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    இவரால் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று கருதப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. வீரராக கலக்கி வந்த இவர் பயிற்சியிலும் தற்போது கலக்கி வருகிறார். ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.

    • இந்த போட்டியில் விராட் கோலி 4 சிக்சர்களை விளாசியுள்ளார்.
    • விராட் கோலி இந்த 4 சிக்சர்களின் மூலம் ஐபிஎல்லில் மொத்தமாக 227 சிக்சர்களை விளாசியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் மோதியது. இதில் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

    முன்னதாக முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலியும் டுப்ளெசிஸும் இணைந்து அபாரமாக ஆடியதால் அந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் விராட் கோலி சரியாக ஆடவில்லை. அந்த போட்டியில் ஆர்சிபி தோற்றது.

    நேற்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் டாப் 3 வீரர்களான விராட் கோலி, டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய மூவருமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். விராட் கோலி 44 பந்தில் 61 ரன்களையும் மேக்ஸ்வெல் 29 பந்தில் 59 ரன்களையும், ஃபாஃப் 46 பந்தில் 79 ரன்களையும் குவிக்க, 20 ஓவரில் 212 ரன்களை குவித்தது. இதனை துரத்திய லக்னோ அணி கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்தது.

    இந்த போட்டியில் 4 சிக்சர்களை விளாசிய விராட் கோலி ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பொல்லார்டை பின்னுக்குத்தள்ளி 5-ம் இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி இந்த 4 சிக்சர்களின் மூலம் ஐபிஎல்லில் மொத்தமாக 227 சிக்சர்களை விளாசியுள்ளார்.

    ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள்:

    1. கிறிஸ் கெய்ல் - 357 சிக்ஸர்கள்

    2. டிவில்லியர்ஸ் - 251 சிக்ஸர்கள்

    3. ரோஹித் சர்மா - 241 சிக்ஸர்கள்

    4. டோனி - 232 சிக்ஸர்கள்

    5. விராட் கோலி - 227 சிக்ஸர்கள்

    • மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பொல்லார்ட் உடன் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் இந்த ஆண்டுக்கான 16-வது சீசன் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பொல்லார்ட் அணியுடன் இணைந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய வீடியோவை மும்பை அணி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


    அந்த வீடியோவில் அணி வீரர்களுக்கு பேட்டிங் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பொல்லார்ட் உடன் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.

    • 35 வயதாகும் அவரை பெரிய தொகைக்கு வைத்திருக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர்.
    • ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட 10 பேர் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

    மும்பை:

    ஐபிஎல் ஏலத்திற்காக மும்பை அணியில் இருந்து முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது. பிசிசிஐ-ம் அதற்கேற்ற பணிகளை செய்து வருகின்றன்.

    அதாவது 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வரும் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு விருப்பமில்லாத வீரர்களை விடுவிக்கும். அந்தவகையில் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் விடுவிக்கவுள்ள வீரர்கள் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என கூறியிருந்தது. எனவே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தனது பட்டியலை இறுதி செய்து அனுப்பிவிட்டது.

    மும்பை அணியில் மொத்தம் 10 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 5 வீரர்கள் மினி ஏலத்தில் விடுவிக்கப்பட்டனர். இதில் மும்பை அணியின் மிக முக்கிய வீரரான பொல்லார்ட்-ம் ஒருவர் என்பது தான் தற்போது அதிர்ச்சி தகவல். 2010-ம் ஆண்டு முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் பொல்லார்ட் தற்போது திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்.

    5 முறை சாம்பியனான மும்பை அணி கடந்த சீசனில் 10-வது இடத்தை பிடித்து மோசமாக வெளியேறியது. இதில் பொல்லார்ட் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 144 ரன்களை மட்டுமே அடித்தார். மேலும் தனது கரியரில் மிக மோசமான சராசரியை ( 14.40 ) வைத்திருந்தார். பந்துவீச்சிலும் பொல்லார்ட் 6 இன்னிங்ஸ்களில் 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

    35 வயதாகும் அவரை பெரிய தொகைக்கு வைத்திருக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர். பொல்லார்ட் மட்டுமின்றி மேலும் 4 நட்சத்திர வீரர்களான ஃபெபியன் ஆலன், டைமல் மில்ஸ், மயங்க் மார்காண்டே, ஹிர்திக் சௌக்கின் ஆகிய 4 பேரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட 10 பேர் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

    • மேற்கிந்தியத் தீவுகளுக்கு கேப்டனாக இருந்த பொல்லார்ட் மூன்று மாதங்களுக்குப் முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
    • பொல்லார்ட் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார்.

    டி20 கிரிக்கெட்டில் 600 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் பொல்லார்ட். லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 100 பந்து போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    ஜூன் 2008 இல் பொல்லார்ட் தனது முதல் டி20 போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை 101 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு கேப்டனாக இருந்த பொல்லார்ட் மூன்று மாதங்களுக்குப் முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் கிளப் தொடர் மற்றும் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் விளையாடி வரும் பொல்லார்ட் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார்.

    டி20-யில் பொல்லார்டு 1,569 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார். இவர் 99 சிக்சர்களை அடித்துள்ளார். இது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் மூன்றாவது அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும். 2012-ல் இலங்கையில் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற மேற்கிந்திய அணியிலும் இவர் இடம் பிடித்தார்.

    ×