search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நொய்யல் ஆற்றில் வெள்ளம்"

    • 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.
    • நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உருவாகும் நொய்யல் ஆறு கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம் கடந்து திருப்பூர், ஒரத்துப்பாளையம் என சுமார் 180 கிலோ மீட்டர் வந்து கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.

    இதனால் திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை நிரம்பி தண்ணீர் கொட்டுகிறது. அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்கிறது.

    ஆனாலும் தரைப்பாலத்தையும் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தண்ணீர் அதிகம் செல்வதால் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் வாகன போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர்.

    நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஈஸ்வரன் கோவில் வீதியில் பாலத்துக்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகம் பாய்வதால் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களிடம் பாதுகாப்பாக இருக்குமாறு, வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்ல ம்மன் கோவில் உள்ளது. நல்லம்மண் தடுப்பணை கட்டும்போது ஏற்பட்ட இடையூறு காரணமாக தன் உயிரை தியாகம் செய்ததால் நல்லம்மன் என்ற சிறுமிக்கு அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் பலருக்கும் குலதெய்வ கோவிலாக இருந்து வருகிறது. இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.

    இதனால் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது தடைபட்டுள்ளது. மேலும் திருப்பூரில் பெய்து வரும் சாரல் மழையால் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அந்த ஆறு பயணிக்க கூடிய ஊர்களில் உள்ள குளங்களும் நிரம்புவது வழக்கம்.
    • குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் முறையாக பராமரிப்பின்றி கிடப்பதும், கழிவுநீர் கால்வாயாக மாறியதும் தான்

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மேற்குத் தொடர்ச்சி மற்றும் அதனைெயாட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நொய்யல் ஆறானது வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் தொடங்கி சூலூர், திருப்பூர் வழியாக 180 கிலோ மீட்டர் பயணம் செய்து கரூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அந்த ஆறு பயணிக்க கூடிய ஊர்களில் உள்ள குளங்களும் நிரம்புவது வழக்கம்.

    சூலூரில் ஆச்சான் குளம், சூலூர் குளம், இருகூர் குளம் நீலாம்பூர் குளம் போன்றவை உள்ளன. இந்த குளங்கள் அனைத்தும், நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது நிரம்பும். ஆனால் தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும் இந்த குளங்களுக்கு தண்ணீர் வருவதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே குளங்களில் இருந்த நீர் மட்டுமே தற்போது வரை உள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் முறையாக பராமரிப்பின்றி கிடப்பதும், கழிவுநீர் கால்வாயாக மாறியதும் தான்.

    10 நாட்களில் இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தண்ணீர் வரவில்லை. அதே கழிவுநீர் மட்டுமே வருகிறது. இங்கு உள்ளவர்கள் குளத்தில் மீன் வளர்த்து வருவதால் அந்த மீன்கள் வெள்ளத்தில் அடித்து சென்றுவிடும் என்பதற்காக தடுத்து வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆகாய தாமரைகள் ன்னார்வலர் மாரிமுத்து கூறியதாவது:- இங்குள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பாமல் கழிவு நீர் அதிகரித்து காணப்படுகிறது. இதனை சரி செய்து தர வேண்டும். மேலும் இங்குள்ள சூலூர், இருகூர் குளங்கள் ஆகாய தாமரைகளாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும் இதுவரை இந்த குளங்களுக்கு தண்ணீர் வரவே இல்லை. தண்ணீர் வரும் கால்வாய்கள் முழுவதும் புதர்மண்டி கிடக்கிறது. இதனை சரி செய்து, தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது பணிதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • அனைத்து இடங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    பேரூர்:

    கோவையில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வபோது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சிறுவாணி ஆற்றில் இருந்தும், நொய்யல் ஆற்றில் இருந்தும் வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. இதில் நொய்யலின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில் அதிக அளவு நீர் வெளியேறுகிறது.

    இதனால் பேரூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் உள்ள பாலத்தை தொட்டப்படி வெள்ளம் செல்கிறது. இதனை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

    நொய்யல் ஆற்றில் இருந்து வரும் வெள்ளம் சித்திரைச்சாவடி அணை, ராஜவாய்கால், காலம்பாளையம் அணைகட்டு, புட்டுவிக்கி, குனியமுத்துர் அனைகட்டு ஆகிய இடங்களுக்கு வந்து கோவையில் உள்ள அனைத்து குளங்களுக்கும் பிரிந்து செல்கிறது.

    இதனால் பேரூர் செட்டிப்பாளையம் பெரியகுளம், சொட்டையான்டி குளம், கங்காநாராயசமூத்திரம், வேடப்பட்டி புதுகுளம், கோளம்பதி குளம், நரசிம்மாபதி குளம், செல்வசிந்தாமணி குளம், உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம் ஆகியவை 99 சதவீதம் நிரம்பி உள்ளது. இனி வரும் காலங்களில் பெய்யும் மழையில் அனைத்து குளங்களும் நிரம்பும் நிலையில் உள்ளது.

    குளங்களில் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் கோவையில் அனைத்து இடங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாசன வசதி பெரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர் மழையால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் மட்டும் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

    நொய்யல் ஆற்று வெள்ளத்தால் தென்னமநல்லூர் பகுதியில் தென்னந் தோப்பு, வாழை தோட்டங்களில் நீர் புகுந்தது. இதே போன்று பேரூர் பகுதியில் வாழை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. சித்திரைச்சாவடி அணையில் 2 அடி உயரத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர்ந்து பெய்த வரும் மழையால் நீரின் அளவு மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் ெபாதுமக்கள் நொய்யல் ஆற்றில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ, இரவு நேரங்களில் செல்லவோ வேண்டாம் என்று பொது பணிதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை தாமதமாக பெய்தாலும் குளம், குட்டைகளில் வெள்ளம் நிரம்பி வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுபாடு நீங்கி உள்ளது. ேமலும் கோவை முழுவதும் குளிர்ந்து இருப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×