என் மலர்
நீங்கள் தேடியது "நோய் தடுப்பூசி முகாம்"
- கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்கும் விதமாக தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்பட உள்ளது.
- இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்கும் விதமாக இன்று முதல் 14-ந் தேதி வரை வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி இருவார முகாம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடத்தப்பட உள்ளது.
சிறிய குஞ்சுகள் முதல் பெரிய கோழிகள் வரை அனைத்து கோழி இனங்களையும் பாதிக்கும் முக்கியமான நச்சுயிரி தொற்று நோயான வெள்ளைக்கழிச்சல் எனப்படும் ராணிக்கெட் நோய் வெயில் காலங்களில் அதிக அளவில் பரவி 100 சதவீதம் வரை கோழிகளில் இறப்பு ஏற்படுத்த கூடியதாகும்.
இந்நோய் கண்ட கோழிகள் வெள்ளைக்கழிச்சல், குறுகிக்கொண்டு தீவனம் மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருக்கும். நரம்பு பாதிக்கப்பட்ட கோழிகள் கால்களை இழுத்து கொண்டும், கழுத்தை திருகி கொண்டும் இருக்கும். இந்நோய் பரவிய பின் மருத்துவம் செய்து குணப்படுத்துவது கடினம்.
எனவே ஈரோடு மாவட்டத்தில் கோழிகளை வளர்க்கும் அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் இத்தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசியினை செலுத்தி கோழிகளில் ஏற்படும் இறப்பினை தவிர்ப்பதன் மூலம் கோழிவளர்ப்பில் அதிகலாபம் பெறலாம்.
இந்த அரியவாய்ப்பினை அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
- கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் ஆடுகளுக்கான நோய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
- முகாமில் மருத்துவ குழுவினர் வெள்ளாடு, செம்மறி ஆடு, விலையில்லா ஆடுகளுக்கு நோய் கொல்வி தடுப்பூசி போட்டனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பாளையம், கொம்ப னைப்புதூர் கிராமங்களில் ஆடுகளுக்கான நோய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி உத்தரவின் பேரில் கால்நடை உதவி இயக்குனர் டாக்டர்.கோவிந்தராஜ் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.
முகாமில் கொம்ப னைப்புதூர் கால்நடை உதவி மருத்துவமனை டாக்டர். சி.விஜயகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் வெள்ளாடு, செம்மறி ஆடு, விலையில்லா ஆடுகளுக்கு நோய் கொல்வி தடுப்பூசி போட்டனர்.
இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பி.ஆர்.சிவக்குமார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.