என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 254663"

    புதிய பஸ் நிலையத்தில் திண்டுக்கல் பஸ் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பாலாஜி (வயது 19). இவர் நேற்று மாலை புதிய பஸ் நிலையத்தில் திண்டுக்கல் பஸ் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு அருகில் வந்த ஒரு வாலிபர் திடீரென பாலாஜி வைத்திருந்த டிராவல் பேக்கை பறித்துக் கொண்டு ஓடினார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வள்ளி பாலம் பகுதியை சேர்ந்த முகம்மது ஆசிக் ( 23) என்பது தெரியவந்தது.

    போலீசார், வழக்குப்பதிவு செய்து முகம்மது ஆசிக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×