என் மலர்
நீங்கள் தேடியது "புயல் சின்னம்"
- கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
புதுச்சேரி:
வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லகூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் பகுதியை சேர்ந்த 11 கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு யாரும் கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையொட்டி காரை க்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் அனைத்தும் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
பைபர் படகுகள் அரசலாற்றங்கரை மற்றும் துறைமுக பகுதியில் மீனவர்கள் நிறுத்தி உள்ளனர். காரைக்காலில் கடலில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.
- மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல், தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டு குறைந்த வேகத்தில் நகர்ந்துவருவதால், கடல் சீற்றம், தரைகாற்று அதிகம் இருக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஏற்றார்போல், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்ச ல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், திரு.பட்டினம் பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவகிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் நேற்று 3ம் நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், மீனவர்கள் விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடிதுறைமுகத்திலும், பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றங்கரையோரம் மற்றும் மீனவ கிரா மங்களிலும் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் தனியார் துறைமுகத்தில், 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் உத்தரவுப்படி, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு க்குழுவினர், பிரதீப்குமார் தலைமையில், முன் எச்சரிக்கை நடவடி க்கையாக, காரைக்கால் கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடற்கரையில் உள்ள மீனவர்களிடம் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்து, மீனவ கிராமங்களில் உள்ள படகுளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தினர். மேலும், பொதுமக்கள் மழை மற்றும் புயல் நேரங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- இந்திய வானிலை மைய அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.
ராமேசுவரம்:
தமிழக கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி கடற்கரை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை வங்க கடலில் மீனவர்கள் மேற்கண்ட காலங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடற்கரையில் இருந்து சில மைல் தூரத்தில் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் வேலை இழந்தனர். இந்த காலகட்டங்களில் தங்களது படகு, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) இரவு டன் மீன்பிடி தடை காலம் முடிவடைகிறது. 2 மாதம் தடை முடியும் நிலையில் ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். படகுகளில் டீசல் நிரப்புவது, ஐஸ் கட்டிகளை இருப்பு வைப்பது போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அரபி கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்கள் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் சின்னம் காரண மாக வருகிற 14-ந்தேதி வரை ராமேசுவரம் மீன வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
புயல் சின்னத்தால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் மீன்பிடி தடைக் காலம் முடிந்து ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மீன்பிடி தடை காலத்தில் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. அரசு கொடுத்த நிவாரண உதவியும் போதவில்லை. எனவே வேறு வேலைக்கு சென்றோம். வருகிற 14-ந்தேதி முதல் கடலுக்கு செல்ல தயாராகி வந்த நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.
- ஆந்திர பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி மெதுவாக நகர்கிறது.
- அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
ஆந்திரா அருகே மத்திய மேற்கு அதனையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றிரவு உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது ஆந்திர பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி மெதுவாக நகர்கிறது.
இது நாளை (புதன்) அல்லது வியாழக்கிழமை வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காற்று மாறுபாடு ஏற்பட்டு தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டுடன் வட மாவட்டங்களில் 2 நாட்கள் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் பகலில் லேசான மழை பெய்யும்.
மாலையில் இருந்து வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சில நேரங்களில் இடி மின்னலுடன் மழை கொட் டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இரவில் பரவலாக மழை பெய்தது. காலையில் மேகமூட்டத்துடன் சிறு சிறு தூறல்களாக பெய்து வருகின்றன. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
- வடக்கு-ஒடிசா-கங்கை மேற்கு வங்காளம் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் அதிக வாய்ப்பு உள்ளது.
சென்னை:
வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ளது.
ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திலிருந்து கிழக்கே சுமார் 310 கிமீ தொலைவிலும், 260 கிமீ கிழக்கு-தென்கிழக்கே கோபால்பூர் (ஒடிசா), பாரதீப் (ஒடிசா) க்கு தென்-தென்கிழக்கே 290 கிமீ மற்றும் திகாவிலிருந்து (மேற்கு வங்கம்) 410 கிமீ தெற்கே காற்றழுத்த தாழ்வு மையம் உள்ளது.
இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
அதன்பிறகு வடக்கு-ஒடிசா-கங்கை மேற்கு வங்காளம் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற கூடும்.
- நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
சென்னை:
அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 23-ந் தேதி (புதன்கிழமை) புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
மத்திய அந்தமான் கடல் பகுதியில் 5.8 கி.மீ. உயரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் மத்திய வங்க கடலில் கிழக்கு பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (திங்கட்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23-ந்தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) வலுப்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உருவாகும் என தெரிகிறது. இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன காரணமாக இன்றும், நாளையும் பெரும் பாலான பகுதிகளிலும், 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.
தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்றும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மொத்தம் 21 மாவட்டங்களில் மழை அதிகம் இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை அதிகமாக இருக்கும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
- காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது.
- தமிழகம் -இலங்கை கடற்கரையை நோக்கி நகரும்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு இன்னும் மழை கிடைக்கவில்லை. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் இன்னும் நிரம்பவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது.
பருவமழை காலம் தொடங்கி ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலில் உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை திரிகோண மலையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு தென் கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்து. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நெருங்கி வந்தது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு- வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழந்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு ஃபெங்கல் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அடுத்த 2 நாட்களில் வடக்கு- வடமேற்கு திசையையில் நகர்ந்து இலங்கையை தொட்டு தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, திருவாரூர் நாகப்பட்டினம், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். ஒருசில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும்.
சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 30-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
- பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.
வங்கக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.

ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் 7-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.