என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேடிக்கை"
- அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மாவிளக்கு போட்டு, பண்டங்கள், பலகாரங்கள் படையலிட்டு வேண்டுதல் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- குறிப்பாக இன்று மாலை குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகரில் உள்ள கோவில்களில் ஆடித் திருவிழாவையொட்டி மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மாவிளக்கு போட்டு, பண்டங்கள், பலகாரங்கள் படையலிட்டு வேண்டுதல் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் குண்டம் இறங்கும் விழா, இன்று வண்டி வேடிக்கை என்பதால் திருவிழா களை கட்டியுள்ளது. குறிப்பாக இன்று மாலை குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பதால் லட்சக்கணக்கான மக்கள் இதில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் திருவிழாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு வருவார்கள் என்பதால், அவர்களுக்கு கறி சோறு சமைத்து போட, சேலத்தில் இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆடு, கோழி, மீன்கள் கடைகளில் அதிகாலை நேரம் முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் இறைச்சியை அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
சேலத்தில் டவுன், செவ்வாய் பேட்டை, குகை, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, தாதகாப்பட்டி, லைன்மேடு, நெத்திமேடு, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், கருங்கல்பட்டி, களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே ஆடு, கோழி, மீன்கள் இறைச்சி விற்பனை களை கட்டியது. வரும் ஞாயிற்றுக்கிழமை திருவிழா இறுதி நாள் வரை இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- சேலம் மாவட்டத்தில் ஆடிமாதத்தில் பல்வேறு கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெறும்.
- இந்த திருவிழாவில் ஆண்களே பெண்வேடமிட்டு வருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 முதல் 20 வரையான வண்டிகள் தயார் செய்யப்படும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஆடிமாதத்தில் பல்வேறு கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெறும். ஆடித் திருவிழாவின் போது, சேலம் குகை ஸ்ரீமாரியம்மன், காளியம்மன் கோயிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி 100 வருடங்களுக்கு மேலாக மக்களிடையே மிகவும் புகழ்பெற்றுவிளங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆடித்திருவிழாவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
இதில் கண்ணைக் கவரும் வண்ண மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் கடவுள் வேடமணிந்தவர்கள், மக்கள் கூட்டத்தில் வலம் வந்து ஆசி வழங்குவது தான், வண்டி வேடிக்கை விழாவின் சிறப்பம்சம். திருவிழாவின் போது பக்தர்கள் நோன்பு இருந்து கடவுள் உருவங்களைத் தரித்து, வண்ண வண்டிகளில் வலம் வருவர்.
பெரும்பாலும் புராணக் கதைகளில் வரும் நிகழ்வுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். பெண்கள் இந்நிகழ்வில் பங்குபெறுவதில்லை. ஆண்களே பெண்வேடமிட்டு வருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 முதல் 20 வரையான வண்டிகள் தயார் செய்யப்படும்.
அந்த வண்டிகளில் மின் விளக்குகளால் அலங்கரித்து ஒளி, ஒலி அமைப்புகள் செய்யப்படும். அலங்கார வண்டிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குகை கோவிலை 3 முறை சுற்றி செல்லும். குகை மாரியம்மன் கோவிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
வேண்டியது நிறை வேறியதும் பக்தர்கள் வண்டி வேடிக்கையில் கடவுள் வேடத்தில் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வண்டிகளில் பக்தர்கள் வேடமிட்டு வந்து அம்மனை வணங்கி செல்வார்கள்.
பக்தர்கள், சிவன், பார்வதி, லட்சுமி, விநாயகர் முருகன் ஆகியோர் கைலசாத்தில் அமர்ந்திருப்பதை போலவும், ரதி மன்மதன் வேடம், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் வேடம் அணிந்தும், வண்டியில் ஊர்வலமாக செல்வர். மேலும், அர்ச்சுனன் வில் வித்தை அரங்கேற்றம், கிருஷ்ணன், நரசிம்மன் இரணியனை வதம் செய்தது. மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலட்சி , வள்ளி, தெய்வானை வேடம் ஆகியவை மிகவும் நேர்த்தியாகப் காட்சிப்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சி நாளை மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும். சேலம் மாநகரின் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை, குழந்தை களுடன் கண்டுகளிப்பர். இன்று மாலை குகை மாரியம்மன்,காளியம்மன் கோவிலில் தீ மிதி நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்