என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு உரிமையாளர்"

    • வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருப்பவர்கள் மீது சில சோதனைகளை நடத்த வேண்டும்.
    • வாடகைக்கு இருப்பவர் ஒரு வெளிநாட்டவராக இருந்தால், அவரது பெயர், பாஸ்போர்ட் விவரங்கள் போன்றவை வழங்கப்பட வேண்டும்.

    மும்பை:

    சமூக விரோத சக்திகள் மக்கள் அதிகம் புழங்கும் குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருந்து நாசவேலைகளில் ஈடுபடுவதை தடுக்கவும், சட்டவிரோதமாக குடியேறும் வெளிநாட்டினரை கண்காணிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள அனைத்து வீட்டு உரிமையாளர்களும் தங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்களை போலீசாரின் ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

    போலீசாரின் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    வாடகைக்கு இருப்பவர்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் அல்லது சமூக விரோத சக்திகள் நாசவேலை நடவடிக்கைகள், கலவரங்கள், மோதல்கள் போன்றவற்றை ஏற்படுத்தாமல் இருக்க வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருப்பவர்கள் மீது சில சோதனைகளை நடத்த வேண்டும்.

    ஒவ்வொரு வீட்டு உரிமையாளர், ஓட்டல், லாட்ஜ், விருந்தினர் மாளிகை போன்ற சொத்துகளை வாடகைக்கு விட்டுள்ளவர்கள் தங்கள் இடத்தில் வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்களை உடனடியாக மும்பை போலீசாரின் போர்ட்டலில் வழங்க வேண்டும்.

    வாடகைக்கு இருப்பவர் ஒரு வெளிநாட்டவராக இருந்தால், அவரது பெயர், பாஸ்போர்ட் விவரங்கள் போன்றவை வழங்கப்பட வேண்டும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு 31(நேற்று) முதல் வருகிற மே 29-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மதுரையில் 2 வீடுகளை அபகரித்து உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்குதெருவை சேர்ந்தவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் என்ற வடிவேல் (வயது 61). இவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய பிரஜையாக உள்ளேன். மதுரை வளர் நகர் பகுதியில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறேன்.இங்கு எனது பெயரில் வாங்கிய இடத்தில் 2 வீடுகள் கட்டி வந்தேன்.

    இதற்காக சிறுகூடல் பட்டியை சேர்ந்த நாச்சியப்பன் என்பவரை உதவியாளராக நியமித்து அவரது வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் வரை வீடுகள் கட்டுவதற்காக அனுப்பியதுடன், அவருக்கும் மாதம்தோறும் ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுத்தேன்.

    இந்த நிலையில் அவசர வேலை காரணமாக வெளிநாடு சென்ற நான் அந்த வீட்டுகளுக்குரிய சாவியை நாச்சியப்பனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன். இங்கு வந்து பார்த்தபோது நாச்சியப்பனும், அவரது மனைவி அருள் சசிகலாவும் என்னுடைய அனுமதியில்லாமல் 2 வீடுகளையும் அபகரித்து க்கொண்டதுடன் அதில் அத்துமீறி நுழைந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கேட்ட போது ஆபாசமாக பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் நாச்சியப்பன், அவரது மனைவி அருள் சசிகலா ஆகியோர் மீது மாட்டு தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×