என் மலர்
நீங்கள் தேடியது "சிறுபான்மையின மாணவர்கள்"
- ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை 31.10.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
- 31.10.2022 வரை மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
சிறுபான்மையினர் இன மாணவ- மாணவிகளுக்கு இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022 -2023 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை (புதியது மற்றும் புதுப்பித்தல்) விண்ணப்பிக்க இந்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இைைணய தளத்தில் 31.10.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் / ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் புதியது மற்றும் புதப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவ- மாணவிகள் அனைவரும் 31.10.2022 வரை மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண். 0421 - 2999130 மற்றும் மின்ன ஞ்சல் முகவரி dbcwotpr@gmail.com - ல் விவரம் பெற்றுக் கொள்ளலாம் எனவும், மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையின மாணவ மாணவிகள் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரைபடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்லாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.