search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.சி.சி."

    • 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவது வரலாறாக இருக்கும்.
    • மகளிர் கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்தும் கவனம் செலுத்தப்படும்.

    சென்னை

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    35 வயதான அவர் டிசம்பர் 1-ந்தேதி ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்கிறார். இளம் வயதில் ஐ.சி.சி. தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டி20 போட்டி அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் வடிவமாக இருக்கலாம். ஆனாலும் கிரிக்கெட்டின் அடித்தளமான டெஸ்ட்க்கு எனது பதவிக்காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். எங்கள் முயற்சிகள் மற்றும் பணிகள் அதை சார்ந்து இருக்கும்.

    உலகம் முழுவதும் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் வகையில் என்னால் முடிந்த அனைத்து பணியையும் செய்வேன். இந்த முக்கிய பொறுப்பில் என் மீது உள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன்.

    2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவது வரலாறாக இருக்கும். ஐ.சி.சி.க்கு தலைமை தாங்குவது சிறப்பானது. மகளிர் கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்தும் கவனம் செலுத்தப்படும்.

    இவ்வாறு ஜெய்ஷா கூறியுள்ளார்.

    • தரமற்று இருப்பதாக முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
    • விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆடுகளம் உருவாக்கப்பட்டது.

    இந்த செயற்கை ஆடு களத்தில் பந்து கணிக்க முடியாத அளவுக்கு சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆகிறது. இது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல என்றும் தரமற்று இருப்பதாகவும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இவ் விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறும்போது, 'நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இது வரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாம் அனைவரும் விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த மைதானக் குழு, நிலைமையை சரி செய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடினமாக உழைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

    • உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கவலை இல்லை.
    • நான் நியூசிலாந்தில் இருந்திருந்தால் இந்த டெஸ்ட் தொடரிலேயே விளையாடமாடடேன்.

    சிட்னி:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு சென்று 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரபடா, யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. அந்த சமயத்தில் உள்நாட்டில் தென்ஆப்பிரிக்க 20 ஓவர் லீக் போட்டி நடப்பதால் அதற்கான ஒப்பந்தத்தில் முன்னணி வீரர்கள் இருப்பதால், தேசிய அணியை தவிர்த்துள்ளனர். இதனால் இதுவரை சர்வதேச போட்டியில் ஆடாத நீல் பிராண்ட் என்ற வீரர் தலைமையில் 2-ம் தர அணி நியூசிலாந்துக்கு அனுப்பப்படுகிறது.

    இதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கவலை இல்லை. நான் நியூசிலாந்தில் இருந்திருந்தால் இந்த டெஸ்ட் தொடரிலேயே விளையாடமாடடேன். முன்னணி வீரர்கள் இன்றி விளையாடும் போட்டி எதற்கு என்று தெரியவில்லை.

    நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு அவர்கள் உரிய மரியாதை கொடுக்காத போது, எதற்காக விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கி செல்கிறதா என்று கேட்க வைக்கிறது. ஐ.சி.சி மற்றும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இதில் ஐ.சி.சி.யோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ விரைவில் தலையிடாவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டாகவே இருக்காது. ஏனெனில் நீங்கள் உங்களது திறமையை மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக சோதிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடும். பெரிய கிரிக்கெட் வாரியங்கள் தங்களது வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.' என்றார்.

    • சென்னை ரசிகர்கள் எப்போதும், நல்ல போட்டியை ரசித்துள்ளனர்.
    • சென்னையில் ஐந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.

    2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 4-ம் தேதி துவங்கி, நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முன்னணி வீரர்களும் தங்களின் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

    இதனிடையே கிரிக்கெட் உலகக் கோப்பை உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 50 ஓவர் உலகக் கோப்பை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

     

    இதற்கான நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி கூறியதாவது..,

    "சென்னை சேப்பாக்கம் மைதானம், உலகக் கோப்பை தொடருக்காக சிறப்பான முறையில் தயார்படுத்தப்பட்டு இருக்கிறது. இங்குள்ள புதிய பெவிலியன் தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஐ.பி.எல். தொடரின் போதே, இந்த பெவிலியனை பலரும் வெகுவாக பாராட்டி இருந்தனர். மழை இல்லையெனில், சிறப்பான கிரிக்கெட்டை இந்த முறை ரசிக்க முடியும்."

    "சென்னை ரசிகர்கள் எப்போதும், நல்ல போட்டியை ரசித்துள்ளனர். சென்னையில் ஐந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு எப்போதும் போல் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது."

    "பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சென்னையில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. சேப்பாக்கம் மைதானம் போட்டிக்கு தயார் நிலையில் உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் இல்லாதது வருத்தமாகவே உள்ளது," என்று தெரிவித்தார்.

    • 2023 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது.
    • உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் போட்டிக்கான அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனையில் நான்கு லட்சம் டிக்கெட்கள் விற்பனைக்கு திறக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்து இருக்கிறது. ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளுக்கான டிக்கெட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதை பி.சி.சி.ஐ. உணர்ந்து கொண்டுள்ளது.

    மாநில கூட்டமைப்புகளுடன் ஆலோசனைகளை முடித்த பிறகு, சுமார் நான்கு லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் முடிந்தவரை அதிக ரசிகர்களுக்கு டிக்கெட்களை விற்பனை செய்யவும், அவர்களை முடிந்தவரை வரலாற்று சிறப்புமிக்க தொடரில் கலந்து கொள்ள செய்ய முடியும்.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான போட்டிகளுக்கு பொது பிரிவு டிக்கெட் விற்பனை செப்டம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. ரசிகர்கள் https://tickets.cricketworldcup.com. வலைதளத்தில் வாங்கிட முடியும். அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் இதே போன்று குறுகிய காலக்கட்டத்தில் அறிவிக்கப்படும்.

    2023 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லா அணிகளும் செல்ல வேண்டும்.
    • பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும்.

     கராச்சி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளருமான ஜெய்ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

    ஆசிய கோப்பை போட்டி குறித்து முடிவு செய்ய ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பக்ரைனில் சமீபத்தில் நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்த மாதம் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தப் போட்டி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையில் விளையாட வராவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் மீண்டும் மிரட்டல் விடுத்தது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் எங்களுக்கு கவலை இல்லை. நான் இதை எப்போதும் சொல்லி வருகிறேன். எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை இருக்கிறது. இது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது ஐ.சி.சி.யின் வேலையாகும். அப்படி செய்யவில்லை என்றால் ஐ.சி.சி.யால் எந்த அர்த்தமும் இல்லை.

    ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லா அணிகளும் செல்ல வேண்டும். எல்லா நாட்டுக்கும் ஒரு விதியை வைத்திருக்க வேண்டும். அணிகள் விளையாட மறுத்தால் அவர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் ஐ.சி.சி. அவர்களை நீக்க வேண்டும்.

    பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா பயப்படுவது ஏன்? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும். விளைவுகளை பற்றி அவர்கள் பயப்படுகிறார்கள்.

    பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நரகத்துக்குதான் அவர்கள் செல்வார்கள். இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட்டு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஜாவித் மியான்டட் கூறியுள்ளார்.

    • முதல் மற்றும் 3வது இடத்தை பாகிஸ்தான் வீரர்கள் பிடித்தனர்.
    • இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 19வது இடம் கிடைத்தது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலை வெளியிடப்பட்டது. அதில், 818 புள்ளிகளுடன் பாகிஸ்தானின் பாபர் ஆசம் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 805 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 3-வது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 19வது இடம் கிடைத்துள்ளது.

    ஐசிசி டி20 சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹெசல்வுட் 792 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் பத்ரைஸ் ஷம்சி 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 3-வது இடத்திலும், உள்ளனர்.

    644 புள்ளிகளுடன் இந்திய வீரர் புவனேஸ்குமார் 9 வது இடத்தை பிடித்தார். யுவேந்திர சாகல் 22வது இடத்திலும், ஹர்சல் படேல் 28 வது இடத்திலும், பும்ரா 34வது இடத்திலும், ரவி பிஷ்னாஸ் 44 இடத்திலும் உள்ளனர்.

    டி20 போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் 267 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 3-வது இடத்திலும், உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 13வது இடம் கிடைத்துள்ளது.

    ×