search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 தரவரிசை"

    • டி20 உலகக் கோப்பையில் 100 சதவீதம் வெற்றி பெற்ற முதல் கேப்டன் ரோகித் சர்மா.
    • அதிவேகமாக 3,500 ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இருவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் 50 வெற்றிகளைப் பெற்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

    டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெலுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றார்.

    இதேபோல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாமுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ள விராட் கோலி டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

    இந்நிலையில், ஓய்வை அறிவித்த நிலையிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் மவுசு இன்னும் குறையவில்லை.

    சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 45வது இடத்திலும், விராட் கோலி 52வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஓய்வு அறிவித்த வீரர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலையில், இவர்களது சாதனைகளால் தரவரிசையில் இன்றும் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்தது.

    துபாய்:

    வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ளன.இதில் வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்து 2-0 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றின.

    இந்நிலையில், டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

    இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்துள்ளது. நியூசிலாந்து மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-இடம் சரிந்து 7-வது இடத்திலும் உள்ளது. கடைசி 3 இடங்களில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

    • டி20 பந்து வீச்சாளர் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது.
    • இந்திய அணியில் இவர் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.

    ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான டி20 பந்து வீச்சாளர் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் நீடித்த ரஷித்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதல் இடத்தை பிடித்தார்.

    பிஷ்னோய் 699 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தார். ரஷித்கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் இவர் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பேட்டர்கள் தரவரிசையில் 56 இடங்கள் முன்னேறி 7ம் இடத்தை பிடித்தார் இந்திய இளம் வீரர் ருதுராஜ். முதலிடத்தில் சூர்யகுமாரும், இரண்டாம் இடத்தில் முகமது ரிஸ்வானும் உள்ளனர்.

    • டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் உள்ளார்.
    • பந்துவீச்சாளர்க்கான தரவரிசையில் தீப்தி சர்மா 3-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (733 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

    இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலிய வீராங்கனை தஹிலா மற்றும் பெத் மூனி (766 ரேட்டிங் புள்ளி) இடம் பிடித்துள்ளனர்.

    இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 6-வது இடத்திலும், ஜெமிமா 10-வது இடத்திலும் உள்ளனர்.

    அதேபோல், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 3-வது இடம் பிடித்துள்ளார்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா 3-வது இடத்திலும், ரேணுகா சிங் 5-வது இடத்திலும் உள்ளார்.

    • டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • பந்துவீச்சாளர்க்கான தரவரிசையில் தீப்தி சர்மா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறினார்.

    துபாய்:

    பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (730 ரேட்டிங் புள்ளி) முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனியை (743 ரேட்டிங் புள்ளி) விட மந்தனா 13 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். 3-வது இடத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார்.

    இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 7-வது இடத்திலும், ஜெமிமா 8-வது இடத்திலும் உள்ளனர்.

    அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சக இந்திய வீராங்கனை ரேணுகா சிங் உள்ளார்.

    • ஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முன்னேற்றம் கண்டுள்ளார்.
    • ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

    துபாய்:

    மொகாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். சூர்யகுமார் யாதவ் 46 ரன்கள் (25 பந்துகள்), லோகேஷ் ராகுல் 55 ரன்கள் (35 ரன்கள்) என சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தனர்.

    இந்நிலையில், ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி சூர்யகுமார் யாதவ் (780 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (825 ரேட்டிங் புள்ளி) உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ராம் உள்ளார். லோகேஷ் ராகுல் 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 14-வது இடத்திலும் கோலி 16-வது இடத்திலும் அங்கம் வகிக்கின்றனர்.

    அதேபோல், டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அவர் தற்போது 180 ரேட்டிங் புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    • முதல் மற்றும் 3வது இடத்தை பாகிஸ்தான் வீரர்கள் பிடித்தனர்.
    • இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 19வது இடம் கிடைத்தது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலை வெளியிடப்பட்டது. அதில், 818 புள்ளிகளுடன் பாகிஸ்தானின் பாபர் ஆசம் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 805 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 3-வது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 19வது இடம் கிடைத்துள்ளது.

    ஐசிசி டி20 சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹெசல்வுட் 792 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் பத்ரைஸ் ஷம்சி 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 3-வது இடத்திலும், உள்ளனர்.

    644 புள்ளிகளுடன் இந்திய வீரர் புவனேஸ்குமார் 9 வது இடத்தை பிடித்தார். யுவேந்திர சாகல் 22வது இடத்திலும், ஹர்சல் படேல் 28 வது இடத்திலும், பும்ரா 34வது இடத்திலும், ரவி பிஷ்னாஸ் 44 இடத்திலும் உள்ளனர்.

    டி20 போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் 267 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 3-வது இடத்திலும், உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 13வது இடம் கிடைத்துள்ளது.

    ×