என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெல்லை விபத்து"
- விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
- விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் திருவம்பலபுரம் கிராமம் தோட்டபள்ளி அருகில் நேற்று அதிகாலை டிரக்கர் வாகனமும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில் டிரக்கர் வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைசுத்துபுதூர் கிராமம், தெற்கு புலிமான்குளத்தைச் சேர்ந்த சந்தனகுமாரி மற்றும் முத்துச்செல்வி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது.
- லாரியில் கொண்டு வரப்பட்ட தேங்காய்கள் சாலைகளில் உருண்டு ஓடின.
நெல்லை:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஈரோட்டில் இருந்து லாரியில் தேங்காய் ஏற்றிக் கொண்டு வந்து நெல்லையில் இறக்கிவிட்டு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்றிரவு ஈரோட்டில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு அவர் புறப்பட்டார். இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் நான்கு வழிச்சாலையில் போலீஸ் சோதனை சாவடி அருகே லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தங்கராஜ் சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினார்.
நடு சாலையில் லாரி கவிழ்ந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டன. இதில் லாரியில் கொண்டு வரப்பட்ட தேங்காய்கள் சாலைகளில் உருண்டு ஓடின.
இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலையின் நடுவே கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
- விபத்து குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ரமேஷ் (வயது 30). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரு காரில் பாபநாசத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.
பின்னர் நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர். காரை ரமேஷ் ஓட்டி வந்துள்ளார்.
பாபநாசத்தை அடுத்த வடமலை சமுத்திரம் பகுதியில் இருந்து கருத்தப்பிள்ளையூர் கிராமம் வழியாக அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்தது.
தொடர்ந்து அந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் 2 ஆக உடைந்தது. அதன் பின்னரும் கட்டுக்குள் வராத அந்த கார் அடுத்ததாக இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் இடது புறத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
- விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இளங்கடை கோட்டார் பகுதியை சேர்ந்தவர் காதர் (வயது44). இவரது மனைவி பவினா (42). இவர்களுக்கு அப்ரா (21) என்ற மகளும், அப்துல்லாகான் (19) என்ற மகனும் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் நேற்று நெல்லைக்கு காரில் வந்திருந்தனர். பின்னர் இரவில் மீண்டும் அவர்கள் 4 பேரும் காரில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். காரை அப்துல்லாகான் ஓட்டிச்சென்றார். நள்ளிரவு நேரத்தில் நாங்குநேரி டோல்கேட்டை கடந்து தனியார் உணவகம் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் இடது புறத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் சென்ற வேகத்தில் கவிழ்ந்து பின்னர் நேராக மாறியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் 4 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் காதர் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், பவினா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பவினாவின் குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே பவினா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரின் உடலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
- விபத்து தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சேதுராயர்புரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி(வயது 34). இவரது உறவினர் களக்காடு அருகே சிதம்பரபுரத்தை சேர்ந்த ரகுவரன்(26).
கட்டிட தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை நாங்குநேரியில் இருந்து நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ரகுவரன் ஓட்டிச் சென்றுள்ளார். மந்திரமூர்த்தி பின்னர் அமர்ந்திருந்தார்.
நாங்குநேரியை கடந்து நான்குவழிச்சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மந்திரமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரகுவரன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுதொடர்பாக அந்த வழியாக சென்றவர்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுவரன் மற்றும் பலியான மந்திர மூர்த்தி ஆகியோரை ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் ரகுவரன் பரிதாபமாக இறந்தார்.
தொடர்ந்து 2 பேரின் உடலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் யார்? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
அம்பையில் இருந்து இன்று ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆண், 2 பெண்கள், ஒரு குழந்தை என 4 பேர் வி.கே.புரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள் அம்பை அருகே கோடராங்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே வந்த வாகனம் டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பை போலீசார் விரைந்து சென்று பலியான 4 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் யார்? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார்.
- சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் உள்ளது. இந்த ஆம்புலன்சை ஆலங்குளத்தை சேர்ந்த அன்னராஜ்(வயது 29) என்பவர் ஓட்டி வருகிறார்.
இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் நோயாளியை கொண்டு சென்று இறக்கிவிட்டு மீண்டும் இன்று அதிகாலையில் முக்கூடலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது திடீரென அதன் ஆக்சில் துண்டானது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த சுத்தமல்லி கோமதிநகரை சேர்ந்த சுப்பிரமணியன்(62) என்பவர் மீது மோதி அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்