என் மலர்
நீங்கள் தேடியது "வலியால் அலறி துடித்தார்"
- ராஜ்குமார் மாலை வீட்டில் இருந்த கம்ப்ரஸர் மோட்டாரை நிறுத்த முயன்றார்
- கலைவாணி அணிந்திருந்த துப்பட்டா கம்ப்ரஸர் மோட்டாரில் சிக்கியது.
சேலம்:
சேலம் சிவதாபுரம் அருகே உள்ள பெத்தாம்பட்டி மேல்காடு பகுதி சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கலைவாணி (வயது 30). இவர் நேற்று மாலை வீட்டில் இருந்த கம்ப்ரஸர் மோட்டாரை நிறுத்த முயன்றார்.
அப்போது எதிர்பா ராத விதமாக கலைவாணி அணிந்திருந்த துப்பட்டா கம்ப்ரஸர் மோட்டாரில் சிக்கியது. உடனடியாக துப்பட்டாவை எடுக்கும் முயற்சியில், கலைவாணி கையை மோட்டாருக்குள் விட்டபோது, அவருடைய 4 விரல்களும் நசுங்கியது. வலியால் அலறி துடித்த அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் குகை மாரியம்மன்- காளியம்மன் கோவிலில் நேற்று மாலை தீ மிதி திருவிழா நடைபெற்றது.
- மோனிஷா (வயது 19) தீ மிதிக்கும் போது காலில் தீக்காயம் ஏற்பட்டது.
கொண்டலாம்பட்டி:
ஆடி பண்டிகையை முன்னிட்டு சேலம் குகை மாரியம்மன்- காளியம்மன் கோவிலில் நேற்று மாலை தீ மிதி திருவிழா நடைபெற்றது. அப்போது கிச்சிப்பாளையத்தை அடுத்த எருமபாளையம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் மகள் மோனிஷா (வயது 19) தீ மிதிக்கும் போது காலில் தீக்காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மோனிஷா சிகிச்சை பெற்று வருகிறார்.