என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மந்திரங்கள்"
- ஆள்காட்டி விரலால் பிடித்து ஜெபித்தால் உரிய பலன் கிடைக்காது.
- சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு.
பூஜை அறையிலோ அல்லது தனிமையான இடத்திலோ அமர்ந்து, மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்தபடி செய்யும் ஜெப வழிபாடு மிகவும் சிறப்புக்குரியது. அதுபற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
* துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலையை பயன்படுத்தி, மந்திர ஜெபம் செய்வதே சிறந்தது.
* 108 எண்ணிக்கையில் மணிகள் அமைந்த மாலையையே ஜெபிக்க பயன்படுத்த வேண்டும். நம் உடலில் உள்ள 72 ஆயிரம் நாடிகளும், 108 புள்ளிகளில் இணைவதால், அதனை தூண்ட 108 எண்ணிக்கை மணி பயன்படுத்தப்படுகிறது.
* ஜெபிப்பதற்காக மாலையை வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரல் கொண்டு மட்டுமே பிடிக்க வேண்டும். ஆள்காட்டி விரலால் பிடித்து ஜெபித்தால் உரிய பலன் கிடைக்காது.
* தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துணியில் அமர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். அதற்காகத்தான், மின்கடத்தா பொருட்களான தர்ப்பையும், கம்பளி துணியும் பயன்படுத்தப்படுகிறது.
* ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாதபடி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.
* ஏதாவது ஒரு குருவிடம் தீட்சை பெற்ற மந்திரத்தைத்தான் ஜெபிக்க பயன்படுத்த வேண்டும். அந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது உதடுகள் அசையக்கூடாது. மனதிற்குள்தான் உச்சரிக்க வேண்டும். இதனை 'மானஸ ஜெபம்' என்பார்கள்.
* குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும், மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.
* எந்த ஒரு செயலையும் அதற்குரிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசவுகரியம் ஏற்படுவது இயல்பு. அதுபோல மந்திர ஜெபத்தை, அமைதியான இடத்தில் அமைதியாக சூழ்நிலையில் செய்ய வேண்டும்.
* சந்தியா கால வேளை எனும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. கிரகணம், பவுர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்வதாலும் பன்மடங்கு பலன் கிடைக்கும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது.
- சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது.
மேல் மலையனூர் ஆலயத்தில் குவிந்து இருக்கும் எலுமிச்சம் பழங்கள் போல வேறு எந்த தலங்களிலும் பார்க்க இயலாது. அந்த அளவுக்கு இங்கு எலும்மிச்சம் பழம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அம்மனுக்கு மற்ற மலர் மாலைகளை விட எலுமிச்சம்பழ மாலையையே அதிகமாக பக்தர்கள் விரும்பி வாங்கி கொடுக்கிறார்கள். மேலும் அம்மனை வழிபட்ட பிறகு திருஷ்டிகளை விரட்ட கழிப்புக்காக சுற்றவும் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய வழிபாடுகள் மற்றும் பூஜை பொருட்கள் எவை என்று விளக்கி கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்த மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் எப்படி பூஜை செய்ய வேண்டும் என ஆகமங்கள் விளக்கி உள்ளன. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாகும்.
பூக்களை தொடுத்து மாலையாக அணிவிப்பதை போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாக கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம். தீயவற்றை போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது.
வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தும் பெண் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம்.
எலுமிச்சம்பழத்தை மாலையாக கடவுளுக்கு அளிப்பதினால், அந்த பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றி அடையலாம் என்பது உறுதி. நமது பிரார்த்தனையை இறைவனிடம் தெரிவிக்க வேண்டுமெனில், நாமே நமது பிரார்த்தனைகளை சங்கல்பம் செய்ய வேண்டும்.
பின்னர் பூ அல்லது பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளை பெற வேண்டும். முயன்றவரை நாமே நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைப்பது கூடுதல் பலன் அளிக்கும்.
சிவபெருமானின் நேத்ரகனி என்றும் எலும்மிச்சம் பழம் அழைக்கப்படுகிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது.
மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளிக்கும் எலுமிச்சம் பழம் பல்வேறு வகையான எதிர்வினை தீய சக்திகளை தம்முள் கிரகித்து கொண்டு திருஷ்டி, செய்வினை போன்றவற்றை பஸ்மம் செய்யும் ஆற்றல் கொண்டது.
மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் போது அம்மன் பாதத்தில் வைத்து எடுக்கப்படும் எலும்மிச்சம் பழங்களை தருவார்கள்.
அங்காளம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள் நிகரற்ற சக்திகள், சிறப்புகள் கொண்டது. எனவே அந்த எலுமிச்சம் பழங்களை வீணாக்கி விடாதீர்கள். வீட்டுக்கு எடுத்து வந்து உங்கள் திருஷ்டி தீர பல வகைகளில் அவற்றை பயன்படுத்தலாம்.
* வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் இரண்டு அரை வட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும். எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.
* எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேற்புறத்தில் தொங்க விட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும்.
* வண்டி வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இதனால் பார்வை திருஷ்டிகளை அறவே தடுக்கலாம்.
* எலுமிச்சம் பழத்தை இரு துண்டுகளாக அரிந்து குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட வேண்டும். இப்படி பரிகாரம் செய்வதால் திருஷ்டி விலகும்.
* அங்காளம்மன் பாதம்பட்ட எலுமிச்சம் பழங்களை வீடுகள், அலுவலகங்கள், வண்டி வாகனங்களில் வைத்துக் கொள்வன் மூலம் பல்வகையான திருஷ்டி மற்றும் தீய எதிர்வினை சக்திகளிடமிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும்.
* 21, 54, 108 எண்ணிக்கையில் சார்த்தப்பட்ட எலுமிச்சம் பழ மாலைகளில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட எலுமிச்சம் பழங்கள் சிறந்த பாதுகாப்பு கவசமாக அமையும். இதை வெளியூர் பயணங்களின் போது கையில் வைத்துக் கொள்வது நல்லது. அது பயணத்தின் போது நமக்கு பாதுகாப்பு சக்தியை பெற்றுத்தரும்.
- சாய் தேசம் ஸ்ரீராம் உலக ரட்சகர் சீரடி சாய்பாபா கோவிலில் வருகிற 8.9.22 அன்று நடைபெற இருக்கும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது.
- சிவாச்சாரியர் மந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தமும், விநாயகர், தத்தாத்ரேயர் கோவில்களுக்கு நிலை முகூர்த்தமும் நடத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பாமணி- நாகை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள சாய் தேசம் ஸ்ரீராம் உலக ரட்சகர் சீரடி சாய்பாபா கோவிலில் வருகிற 8.9.22 அன்று நடைபெற இருக்கும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது.
முதலில் பாபா பாதத்தில் பல வரிசை தட்டுகளை வைத்து ஆரத்தி எடுத்து பின்னர் காடந்தேத்தி கோவில் சிவாச்சாரியர் மந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தமும், விநாயகர், ஸ்ரீ தத்தாத்ரேயர் கோவில்களுக்கு நிலை முகூர்த்தமும் நடத்தப்பட்டது.
இதில் கோவில் திருப்பணி செய்து வரும் ஸ்ரீராம் உலக ரட்சகர் ஸ்ரீரடி சாய்பாபா அறக்கட்டளையின் தலைவரும், நிர்வாகியுமான தொழிலதிபர் ஆர்.வி.கருணாநிதி, துணைத் தலைவர் ஆடிட்டர் எல்.ராகவன், செயலாளர் ஆர்.வி.ராஜேந்திரன், இணை செயலாளர் ஆர். சீனிவாசன், பொருளாளர் கே ராம் பிரசாத்.
அறங்காவலர்கள் திருத்துறைப்பூண்டி நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன், கவுன்சிலரும், தி.மு.க நகர செயலாளருமான பாண்டியன், அரசு ஒப்பந்தக்காரர் ஓம்சக்தி கண்ணன், திருத்துறைபூண்டி கிறிஸ்துவ சமுதாய தலைவர் ஆரோக்கியசாமி, முன்னாள் ஜமாத் தலைவர் ஜனாப். ஹாஜாமைதீன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்