search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மராத்தான்"

    • ரோட்டரி சங்கங்கள் குறைந்தபட்சம் 100 நபர்களை நிகழ்ச்சியில் பங்கு பெற வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.
    • அனைவரும் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக மாற்றுங்கள் என்றார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் அமையவுள்ள இலவச புற்றுநோய் சிகிச்சை கட்டடத்துக்கு நிதி திரட்டி உதவும் வகையில் வருகிற ஜனவரி 8-ந் தேதி திருப்பூர் வாக்கத்தான் மற்றும் மாரத்தான் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க பல நிறுவனங்கள் அவர்களுக்கான நுழைவு கட்டணத்தை செலுத்த ஆர்வமாக முன்வந்துள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

    திருப்பூரில் உள்ள அனைத்து சங்கங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். திருப்பூர் அனைத்து ரோட்டரி சங்கங்கள், தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை, காங்கயம், மேட்டுப்பாளையம், வெள்ளகோவில், காரமடை, சோமனூர், அன்னூர் உள்ளிட்ட அனைத்து ரோட்டரி சங்கங்களும் மாபெரும் வாக்கத்தான், மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.

    ரோட்டரி சங்கங்கள் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 100 நபர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வைப்பதாக உறுதியளித்துள்ளனர். 3 நாட்களில் 3,000க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். 15 ஆயிரம் பேரை நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:- சமூக நலன் காக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியினை மக்கள் மத்தியில் முழுதாக கொண்டு சேர்க்கும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளோம். ஏழை, எளிய புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு கட்டப்படும் இலவச புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு நிதி திரட்டும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தன்னார்வத்தோடு பங்கேற்று நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய வேண்டும்.

    பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். 500, ஆயிரம் ரூபாய் என்பது சாதாரணம் இல்லை. அது முகம் அறியாத ஏழை, எளிய மக்களுக்கு செய்யும் மகத்தான சேவை என்பதை மனதில் கொள்ளுங்கள். அனைவரும் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக மாற்றுங்கள் என்றார்.

    • காரைக்குடியில் நடந்த போதைபொருள் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போதை ஒழியட்டும் பாதை மிளிரட்டும் என போதை பொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் அழகப்பா பல்கலைக்கழக பவ நகர் மைதானத்தில் இன்று காலை நடந்தது.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கினார்.சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன் மினி மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பவநகர் ஸ்டேடியத்தில் இருந்து ஆரியவன், செக்காலை பேக்கரி, பெரியார் சிலை வழியாக கண்ணதாசன் மணிமண்டபத்தில் முடி வடைந்தது. கலந்து கொண்ட வர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் பெரியகருப்பன், நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வழங்கி னர்.

    இதில் சார் ஆட்சியர் பிரபாகரன், முன்னாள் அமைச்சர் தென்னவன், சாக்கோட்டை சேர்மன் சரண்யா செந்தில்நாதன், பேரூராட்சி சேர்மன்கள் ராதிகா, சங்கீதா, கார்த்திக்சோலை, அழ கப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்புகுழு உறுப்பினர்கள் சுவாமி நாதன், கருப்புச்சாமி, மாவட்ட இளைஞரணி அமை ப்பாளர் செந்தில்குமார், நகர்மன்ற ஆணை யாளர் லட்சுமணன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஓடினர்.காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75- வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் 6.8.2022 தொடங்கி 12.8.2022 வரை நடைபெற்று வருகின்றது.
    • அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75- வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் 6.8.2022 தொடங்கி 12.8.2022 வரை நடைபெற்று வருகின்றது.

    அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவிகள் மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் அமுதப்பெருவிழா மற்றும் அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சி முகாமில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினிமராத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா, நாமக்கல் நகராட்சித்தலைவர் கலாநிதி முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். இந்த பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் நாமக்கல் உழவர் சந்தை, ஆஞ்சிநேயர் கோவில், சேலம் ரோடு, திருச்செங்கோடு சாலை, நாமக்கல் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் குளக்கரைத்திடல் வந்தடைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பால்கிரேஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அம்பிகா உள்பட கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×