என் மலர்
நீங்கள் தேடியது "இறைச்சியின்"
- நகராட்சி மின் மயானம் அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையில் ஒரு மாட்டு இறைச்சி கடை செயல்பட்டு வருகிறது
- மாட்டு இறைச்சியின் கழிவுகளை காவிரி ஆற்றிலேயே விட்டு விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மாதையன் குட்டை பகுதியில் உள்ள நகராட்சி மின் மயானம் அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையில் ஒரு மாட்டு இறைச்சி கடை செயல்பட்டு வருகிறது.
இந்த மாட்டு இறைச்சியின் கழிவுகளை காவிரி ஆற்றிலேயே விட்டு விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காவிரி ஆற்றில் இருந்து பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கும் நிலையில் காவிரி ஆறு மாட்டு கழிவுகளால் மாசுபடுவதுடன் சுற்று வட்டார குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக தெரிவித்தனர்.
ஆகவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மாட்டு இறைச்சி கடையினை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.