search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயிண்டர் தற்கொலை"

    • விஜயக்குமார் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி நாகமலை எக்ஸ்ட ன்சன் வாய்க்கால் சாலை யை சேர்ந்தவர் விஜயக்கு மார் (வயது 34). கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பெயி ண்டராக வேலை பார்த்து வந்தார்.

    விஜயக்குமாருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஏற்பட்ட விபத்தில் உடல்நி லை பாதிக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் விஜயக்குமாருக்கு தொட ர்ந்து வலி இருந்து வந்து ள்ளது. இதனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான விஜயக்குமார் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த விஜயக்குமாரின் மனைவி சத்யா, விஜயக்குமாரை மீட்டு முத லுதவி சிகிச்சைக்காக கோ பி அரசு மருத்துவமனை யில் சேர்த்தார்.

    பின்னர் மே ல்சிகிச்சைக்காக பெருந்து றையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இந்நிலை யில் அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • தண்டாயுதபாணி இறந்து உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவா னியில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் உள்ள பெருமாள்மலை அடிவாரப் பகுதியை சேர்ந்தவர் தண் டாயுதபாணி (வயது 36).

    இவரின் தாய் தந்தை உடல் நல குறைவால் இறந்த நிலையில் தனியாக பெயிண்டர் வேலை செய்து அப்பகுதியில் வீடு ஒன்றில் குடியிருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் தண்டாயு தபாணி மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வருவதாக தெரிகிறது.

    இந்நிலையில் தண்டாயு தபாணி வீட்டின் அருகில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவர் தண்டாயுதபாணி வீடு 2 நாட்களாக பூட்டியிருந்த நிலையில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

    அப்போது தண்டாயுதபாணி இறந்து உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இறந்து கிடந்த த ண்டாயுதபாணி உடலை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் தண்டாயுதபாணி உறவினர் ராஜவேல் இதுகுறித்து சித்தோடு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெயிண்டர் மீது சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் அலைக்கழிப்பதால் பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி கோர்ட்டு அரிசி ஆலை தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 45). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று சீலையம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் மீது கணேசன் மோதியதாக தெரிகிறது. இதனால் முதியவர் காயமடைந்தார்.

    இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்த கணேசன் தன் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த விபரத்தை தனக்கு தெரிவிக்காமலும், இரு சக்கர வாகனத்தை திருப்பித்தராமலும் இருந்த நிலை குறித்து தனது மனை வியிடம் கூறி வேதனையடை ந்தார். நேற்று முன்தினம் தனது வீட்டி லேயே கணேசன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    தேனி அரசு மருத்துவக்க ல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்ட கணே சன் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். இந்நிலையில் போலீசார் அலைக்கழிப்பு செய்த தால்தான் தனது கணவர் இறந்து விட்டார் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கலெக்டர் அலுவலகத்தில் கணேசனின் மனைவி சின்னப்பொன்னு மற்றும் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்.

    • வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டிவலசு சாஸ்திரி சாலையை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 43). பெயிண்டர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் காணப்பட்டார். சம்பவத்தன்று வெங்கடாசலத்தின் மனைவி வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடாசலம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.
    • இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பெரியார் தெருவை சேர்ந்தவர் முனேஷ் (28). பெயிண்டர். இவரது மனைவி தரணி (22). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் முனேஷ் சிறு வயது முதல் இருந்தே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அடிக்கடி மூச்சு விடவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டுக்கு வந்த முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திவீர சிகிச்சை பிரிவில் இருந்த முனேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×