search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவிஎஸ் லட்சுமண்"

    • டெஸ்ட் அணி அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. கம்பீர் அணியுடன் செல்ல இருக்கிறார்.
    • அந்த நேரத்தில் டி20 தொடர் நடத்தப்படுவதால் லட்சுமண் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் உள்ளார். தேசிய அகாடமியின் தலைமை ஆலோசகராக வி.வி.எஸ். லஷ்மண் உள்ளார். இந்திய அணி நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான டி20 இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணிக்கு தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏனென்றால், இந்திய டி20 கிரிக்கெட் அணி தென்ஆப்பரிக்காவில் நவம்பர் 8, 10, 13 மற்றும் 15-ந்தேதிகளில் விளையாடுகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி 10-11-ந்தேதிகளில் புறப்படுகிறது.

    கவுதம் கம்பீர் இந்திய டெஸ்ட் அணியுடன் ஆஸ்திரேலியா புறப்பட வேண்டியிருப்பதால், டி20 அணியுடன் செல்ல முடியாது. இதனால் லட்சுமண் நியமிக்கப்பட்டள்ளார்.

    லஷ்மண் உடன் சாய்ராஜ் பகதுலே, ஹிஷ்கேஷ் கனித்கர், சுபாதீப் கோஷ் போன்ற கோச்சிங் ஸ்டாஃப்களும் செல்ல இருக்கிறார்கள்.

    • ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
    • தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்க டிராவிட் விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். இந்தியாவில நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரோடு அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றால், ராகுல் டிராவிட் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    தோல்வியடைந்ததால் எதிர்காலம் குறித்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது அதுகுறித்து யோசிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வி.வி.எஸ். லட்சுமண் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராகலாம் எனத் தெரிகிறது.

    ராகுல் டிராவிட் தனது பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள விரும்பவில்லை. குறிப்பாக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை என பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில் விவிஎஸ் லட்சுமண் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ராகுல் டிராவிட் அணியுடன் பயணம் செய்ய முடியாத நிலையில், விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். இன்று தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார்.

    ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்தியா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை (2023) இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய போதிலும், சாம்பியன் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது.

    • ரிஷப் பண்ட் இந்தியாவின் முக்கியமான வீரர்.
    • டி20 கிரிக்கெட் பேட்ஸ்மன்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்க வேண்டும்.

    கிறிஸ்ட்சர்ச்:

    இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்று தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டுள்ள ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மண்களில் சதம் விளாசி பெரிய சாதனை படைத்திருக்கிறார். எனினும் ரிஷப் பண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை, ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ஏற்படுத்த முடியவில்லை.

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் 6, 11, 15, 10 ஆகிய ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். அதுவும் டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்டின் ரெக்கார்ட் மோசமாக உள்ளது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக மூன்று ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் ஆறு ரன்கள் மட்டுமே ரிஷப் பண்ட் அடித்திருக்கிறார்.

    இது குறித்து பயிற்சியாளர் லட்சுமணன் கூறியதாவது:-

    நாங்கள் அனைத்து தரப்பு வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறோம் .அதே சமயம் யாரெல்லாம் அணியில் தேர்வு செய்யப்படவில்லையோ அதற்கான காரணத்தையும் கூறி விடுகிறோம். மிகவும் முக்கியம் பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

    ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் சதம் விளாசி ரொம்ப நாள் கூட ஆகவில்லை. எனவே அவருக்குப் போதிய ஆதரவு வழங்குவது மிகவும் முக்கியம். ரிஷப் பண்ட் இந்தியாவில் முக்கியமான வீரர். ஒவ்வொரு போட்டியிலும் எத்தனை பேட்ஸ்மேன்கள் வேண்டும் எத்தனை பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்று யுத்திகளுக்கு தகுந்தவாறு தேர்வு செய்து அணியை களம் இருக்கிறோம்.

    இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பார்த்தாலே உங்களுக்கு அது புரியும். இதேபோன்று டி20 கிரிக்கெட் பேட்ஸ்மன்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பெரிய ஷாட்கள் அடித்து ரன்கள் குவிக்க முடியும். பயிற்சியாளராக நான் திருப்திகரமாக செயல்படுகிறேன் என்று நினைக்கிறேன்.

    ஆனால் நியூசிலாந்து தொடர் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஏனென்றால் வானிலை காரணமாக எங்களுக்கு முழு போட்டியும் கிடைக்கவில்லை. மழை நிற்பதும் தொடங்குவதும் என போட்டி சென்றது. இளம் வீரர்களுடன் பயிற்சியாளராக செயல்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    • ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்ற இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் செல்லவில்லை.
    • இந்திய அணி வரும் 28ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது

    புதுடெல்லி:

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிய கோப்பை தொடருக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்ற இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் செல்லவில்லை. அந்த தொடரிலும் லட்சுமண் பயிற்சியாளராக பணியாற்றினார். ராகுல் டிராவிட் கொரோனா தொற்றில் இருந்து மீண்டால், ஆசிய கோப்பை தொடரில் அணியுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ஆசிய கோப்பையில் இந்திய அணி வரும் 28ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா-ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22-ந்தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது.
    • ஆசிய கோப்பை போட்டிக்காக ராகுல் டிராவிட் வருகிற 23-ந்தேதி அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார்.

    புதுடெல்லி:

    லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22-ந்தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், 'ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை லட்சுமண் கவனிப்பார். இதனால் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு எடுத்துக் கொண்டதாக அர்த்தம் கிடையாது. அவர் ஆசிய கோப்பை போட்டிக்காக வருகிற 23-ந்தேதி அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார்.

    இரண்டு தொடருக்கு இடையே குறைந்த கால இடைவெளி மட்டுமே இருப்பதால் ஜிம்பாப்வே தொடருக்கு பயிற்சியாளராக லட்சுமணை நியமித்துள்ளோம். லோகேஷ் ராகுல், தீபக் ஹூடா இருவரும் ஜிம்பாப்வே தொடர் முடிந்ததும் ஹராரேயில் இருந்து விமானம் மூலம் துபாய் வந்து ஆசிய கோப்பை அணியினருடன் இணைந்து கொள்வார்கள்' என்றார்.

    ×