search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கலைக் கல்லூரி"

    • அரசு கலைக் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன.
    • 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு என்றாலும் பி.காம் பாடப் பிரிவுக்கு அதிகளவில் விண்ணப்பித்தனர். இன்று முதல் 30-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்கியது.

    சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு உள்ள ஒதுக்கீட்டு இடங்களை விட ஒருசில கல்லூரிகளில் அதிகளவில் மாணவர்கள் வந்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொது பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. அதைவிடுத்து 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.

    அரசு கலைக் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும்.
    • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும். ஏற்கனவே கடந்த 20-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டன.

    வருகிற 27-ந் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    இதைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 2-வது சுற்று ஜூன் 24 முதல் 29-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    இந்த வருடமும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் சேருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களில் 100-க்கு 100 எடுத்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட போட்டி அதிகமாக உள்ளது. கடந்த வருடம் தேவையின் அடிப்படையில் 20 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டன. அதுபோல இந்த ஆண்டும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • செஞ்சி அரசு கலைக் கல்லூரியில் 17-ந் தேதி 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
    • விவரங்களை கல்லூரியின் விளம்பர பலகையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    விழுப்புரம்:

    செஞ்சியில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்காக முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது மீண்டும் 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. அன்று பி.ஏ. ஆங்கில பிரிவுக்கும் 18 ஆம் தேதி பி.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கும் 22-ந் தேதி தேதி பி.காம், பி.பி.ஏ. ஆகிய பிரிவுகளுக்கும் 23ஆம் தேதி பி.ஏ தமிழ் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது, மேலும் விவரங்களை கல்லூரியின் விளம்பர பலகையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×