என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறப்பு செயலாக்கம்"
- முதுகுளத்தூரில் சிறப்பு செயலாக்க துறையின் திட்டங்கள் ஆய்வு நடந்தது.
- உதவி வேளாண்மை அலுவலர் சுபதர்ஷினி ஆய்விற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
முதுகுளத்தூர், ஆக. 14-
முதுகுளத்தூர் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் ஒரு பகுதியாக 2021-22 ஆம் ஆண்டில் விளக்கனேந்தல் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பசு மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகளைப் பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளிடம் திட்டத்தின் தாக்கம் குறித்து கலந்துரையாடினர்.
திட்டத்தின் கீழ் பல்வேறு இனங்களின் கீழ் வழங்கப்பட்டவை பராமரிப்பில் உள்ளதா? என ஆய்வு செய்தனர். கால்நடை பராமரிப்பில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அந்த பகுதி கால்நடை மருத்துவர் அறிவுரை வழங்குவதை விசாரித்தனர். உதவி வேளாண்மை அலுவலரால் பராமரிக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் பட்டியல் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்ட பதிவேடுகளை பார்வையிட்டனர்.
பின்னர், வரும் ஆண்டுகளில் இவற்றைச் சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் உடனிருந்தார். உதவி வேளாண்மை அலுவலர் சுபதர்ஷினி ஆய்விற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.