என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தங்கும்"
- சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் உஷார்படுத்த ப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- இதேபோல் ஈரோடு அருகே உள்ள காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஈரோடு:
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் உஷார்படுத்த ப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அமைதியாக நடைபெறும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
டவுன் டி.எஸ்.பி.ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் ஒவ்வொரு தங்கும் விடுதியாக சென்று சோதனை செய்தனர். விடுதியில் தங்கியுள்ள–வர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். சமீபத்தில் யாரெல்லாம் புதிதாக விடுதியில் தங்கி உள்ளனர் என்ற விபரமும் கேட்டறிந்தனர். விடுதியில் யாரேனும் சந்தேகம் படும்படி இருந்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு காவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் எல்லை பகுதியில் அமைந்துள்ள சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடி, தமிழக- கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்ட 24 மணி நேரமும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதுபோல் மாவட்டத்தில் 12 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்ப ட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் 24 மணி நேரமும் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்த ப்பட்டு பயணிகள் உடைமை தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதி க்கப்படுகிறது.
இதேபோல் ஈரோடு அருகே உள்ள காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் ஈரோட்டில் பெரும்பாலும் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் முன்பு தேசியக் கொடி ஏற்றப்பட்டு ள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் முறை இல்லாமல் கீழ் நோக்கி தேசிய கொடி பலர் கட்டி வைத்திருந்தனர்.
அதனை போலீசார் பார்த்து சரிசெய்து முறையாக கட்ட சொல்லி வலியுறுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்