என் மலர்
நீங்கள் தேடியது "Pledge சுதந்திர தினம்"
- அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என சுதந்திர தின விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
- அனைவரும் கைகளில் தேசியக்கொடி ஏந்தியபடி சுதந்திரத்தை பேணி பாதுகாக்கவேண்டும்
தஞ்சாவூர்:
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சையில் மீனாட்சி மருத்துவமனை ஊழியர்கள் தேசியக்கொடி ஏந்தி விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அனைவரும் கைகளில் தேசியக்கொடி ஏந்தியபடி சுதந்திரத்தை பேணி பாதுகாக்கவேண்டும். அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என சுதந்திர தின விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர். பாலமுருகன், மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.