என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கிக் கொள்ளை"

    • பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, கருப்பு நிற காரில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
    • கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களிடம் இந்தியிலும், கொள்ளை நடந்தபோது வங்கிக்கு அருகில் இருந்த மாணவர்களிடம் கன்னடத்திலும் பேசினர்.

    கர்நாடகாவில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியில் இன்று காலையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், கோட்டேகர் கூட்டுறவு வங்கிக்குள் நுழைந்தனர். பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, கருப்பு நிற காரில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    25 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கொள்ளையர்கள், வங்கிக்குள் நுழைந்து, ஊழியர்களை மிரட்டி, பணம் மற்றும் தங்க நகைகள் அடங்கிய அலமாரியை திறந்து கொள்ளையடித்துள்ளனர்.

    திருடப்பட்ட தங்க நகைகள், ரொக்கம் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களிடம் இந்தியிலும், கொள்ளை நடந்தபோது வங்கிக்கு அருகில் இருந்த மாணவர்களிடம் கன்னடத்திலும் பேசியதாக மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார். வங்கியின் சிசிடிவி அமைப்பில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநரின் மோதிரத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்று அகர்வால் கூறினார்.

    நாய்கள், கைரேகை நிபுணர்கள் கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முன்னதாக கர்நாடக மாநிலம் பிதர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப நேற்று வேனில் வந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.இதில் வங்கி ஊழியர் உயிரிழந்தார்.

    பைக்கில் வந்த கொள்ளையவர்கள் பணப்பெட்டியை கொள்ளையடித்துச் சென்றனர். இந்நிலையில் நேரடியாக வங்கியிலேயே நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • 15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் கூட்டாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை.

    சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் பெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு செயல்பட்டு வருகிறது. நேற்று பட்டப் பகலில் இந்த வங்கியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்ற நபரே இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 4 குற்றவாளிகள் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் இதில், பாலாஜி என்ற நபரை போலீசார் இன்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சக்திவேல் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில், சுமார் 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தனிப்படை போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் கூட்டாளிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் மீதமுள்ள சுமார் 17 கிலோ தங்கத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×