என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கஞ்சா வியாபாரி கைது"
- வேலழகி அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அண்ணாநகர் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வேலழகி மீது பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 55 வழக்குகள் உள்ளது.
ராயபுரம்:
புளியந்தோப்பு, கே.பி. பூங்காவை சேர்ந்தவர் வேலழகி (65). பிரபல கஞ்சா வியாபாரி. இவர் மீது பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 55 வழக்குகள் உள்ளது.
இந்தநிலையில் வேலழகி அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அண்ணாநகர் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று வேலழகியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான வேலழகி போலீசாரின் பட்டியலில் "பி" பிரிவு ரவுடியாகவும் உள்ளார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ரூ.100 முதல் 300 வரை விற்பனை செய்கிறார்கள்.
- வடமாநிலங்களில் இருந்து பார்சலில் கஞ்சா வருகிறது.
கோவை
கோவை மாவட்டத்தில் கஞ்சாவிற்பனை பரவலாக நடக்கிறது. அதிகாலை, நள்ளிரவு என எந்த நேரத்திலும் சிலர் ரகசியமாக கஞ்சா விற்பனை நடத்தி வருகிறார்கள்.
மாவட்ட அளவில், நடப்பாண்டில் இதுவரை 350 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 420 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கஞ்சா வியாபாரம் குறையவில்லை. அரசூர், கணியூர், நீலாம்பூர், கோவில்பாளையம், அன்னூர், சூலூர்,தொண்டாமுத்தூர், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி வட்டாரங்கனில் கஞ்சா வியாபாரம் பரவலாக நடக்கிறது.
கஞ்சா பொட்டலங்களை வீடு தேடி சென்று வழங்கும் வியாபாரிகளும் இருக்கிறார்கள். வீதியின் குறிப்பிட்ட சில இடங்களை அடையாளமாக வைத்து கஞ்சா வியாபாரம் நடக்கிறது. காலியிடம், மைதானம், புதர்காடு, பெட்டிக்கடை என பல இடங்களில் கஞ்சா வியாபாரம் நடந்து வருகிறது.
சிலர் கஞ்சாவை மூட்டை முட்டையாக வாங்கி வந்து பதுக்கி வைத்து கிலோ கணக்கில் ரகசியமாக சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். சில்லரை வியாபாரிகள், கஞ்சா பயன்படுத்தும் நபர்களுக்கு 20 கிராம், 50 கிராம் என பொட்டல் போட்டு விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து புறநகர் போலீசார் கூறியதாவது:-
இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள், வாலிபர்கள் கஞ்சா போதையை விரும்புகிறார்கள். எந்த நேரத்திலும் இவர்கள் கஞ்சாவை தேடி வருகிறார்கள். பொட்டலம் கஞ்சா ரூ.100 முதல் 300 வரை விற்பனை செய்கிறார்கள்.
போலீசார் ரோந்து சென்று கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகிறோம். சில நாட்களில் அதே பகுதியில் வேறு ஒருவர் வத்து கஞ்சா விற்பனை செய்கிறார். சிலர் வேறு தொழில் செய்கிறார்கள்.
மில்லில் வேலை செய்யும் நபர் ஒருவர் அதே மில்லில் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தார். பல இடங்களில் கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்டது. வடமாநிலங்களில் இருந்து பார்சலில் கஞ்சா வருகிறது. இதனை எப்படி தடுப்பது? எவ்வாறு தடுப்பது என தெரியவில்லை. பல வகைகளில் கடத்தி வருகிறார்கள்.
குறிப்பிட்ட சில பகுதிகளில் அடிக்கடி ரோந்து பணி நடத்தினால் மட்டுமே கஞ்சா வியாபாரத்தை கட்டுப்படுத்த முடிகிறது. கஞ்சா பயன்படுத்துவோர் அதிகமாகி வருவதும், கஞ்சா தடையின்றி சப்ளையாவதும் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக பகுடு பாஸ்கரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர்.
- தாய், மகள் இருவரிடமும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக விடுவதாக மிரட்டி உள்ளார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் என்கின்ற பகுடு பாஸ்கரன் (33).
இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், தற்போது 2-வது மனைவிதுர்கா(30) என்பவருடன் வசிக்கிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசிக்கின்றார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து ஆற்காட்டில் குடியேறினார்.
அந்த பெண் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவரது மகள் ஆற்காட்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
இந்நிலையில், அந்த பெண்ணிடம் பாஸ்கரன். அவ்வப்போது வலியச் சென்று பேச்சு கொடுப்பாராம். ஆனால் அந்த பெண் அவரை கண்டுகொள்ளாமல் விரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணை எப்படியாவது அடைய வேண்டுமென பாஸ்கரன் காத்திருந்துள்ளார். மேலும் பாஸ்கரின் 2வது மனைவி துர்காவிற்கும் அந்த பெண்ணிற்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக பகுடு பாஸ்கரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். அவர் கடந்த 27ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரிடம் தன்னிடம் அந்த பெண் அடிக்கடி தகராறு செய்து திட்டியதாக துர்கா கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்த பெண்ணை பழி வாங்க திட்டம் தீட்டிய பாஸ்கரன் கடந்த 28ம் தேதி இரவு 11 மணிக்கு தனது மனைவியுடன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார். அப்போது கதவை திறந்தவுடன் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி பாஸ்கரன் நுழைந்துள்ளார்.
துர்கா வெளிப்புறமாக கதவை பூட்டிக்கொண்டு வெளியே காவலுக்கு நின்று உள்ளார். பின்னர், பாஸ்கர் கத்தியை காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை கட்டி போட்டுள்ளார். மேலும் சத்தம் கேட்டு ஓடி வந்த மாணவியின் உடைகளை கழற்ற சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மாணவியை நிர்வாணமாக நிற்க வைத்து தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து மாணவியை அங்குள்ள கழிவறையில் தள்ளி கதவை பூட்டி உள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணையும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், அவரையும் நிர்வாணமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். மறுநாள் அதிகாலை 3 மணி வரை இருவரையும் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த பகுடு பாஸ்கரன் அனைத்தையும் செல்போனில் வீடியோ மற்றும் போட்டோக்களாக பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தாய், மகள் இருவரிடமும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாகவும், எங்ருந்தாலும் தேடி வந்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
மேலும், தொடர்ந்து பல முறை வீடியோவை காட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவார்கள் என்று அச்சத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் அந்தப் பெண் இருந்துள்ளார்.
தொடர்ந்து, பகுடு பாஸ்கரின் தொல்லை அதிகமானதால் மன வேதனை அடைந்த அந்த பெண் இதுகுறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை புகார் செய்தார்.
இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்த பகடு பாஸ்கரன் மற்றும் உடந்தையாக இருந்த அவரது மனைவி துர்கா ஆகியோரை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆற்காடு-கண்ணமங்கலம் கூட்ரோடு உழவர் சந்தை அருகில் பதுங்கி இருந்த தம்பதிகள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
- சிறையில் அடைத்தனர்
ஆற்காடு:
ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன்போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆற்காடு அண்ணாநகர் மாசாபேட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்கிற பகுடு பாஸ்கர் (வயது 33) என்பவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் பாஸ்கரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக் டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
- கம்பம் வடக்குபோலீசார் வாரச்சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- அப்பகுதியில் கஞ்சா விற்றவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கம்பம்:
கம்பம் வடக்குபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையிலான போலீசார் வாரச்சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது உலகத்தேவர் தெருவை சேர்ந்த தங்கமலை(23) என்பவர் ஒரு கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.
போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- போடி தாலுகா போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் வினோபாஜி காலனி மயானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது மூவேந்தர் பள்ளி அருகில் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் லிங்கேஷ் (வயது 21) என்பவர் 1.100 கிராம் கஞ்சாைவ விற்பனைக்கு வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்