search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு தொழிற்பயிற்சி நிலையம்"

    • தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
    • விழாவில் நகர செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் மீனாட்சி தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். உதவி பயிற்சி அலுவலர் சேகர் வரவேற்று பேசினார். விழாவில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    விழாவில் நகர செயலாளர் அப்பாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ், யூனியன் சேர்மன் சுப்பம்மாள், துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், நகர்மன்ற துணைத் தலைவர் ராசையா, திரிகூடபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீரான், நகர துணை செயலாளர் காசி, நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், மதி, நல்லையா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புர மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    திண்டிவனம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனத்தில் 2023-ம் ஆண்டு சேர்க்கையில் சேர்ந்திட எஸ்.எஸ்.எல்.சி, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதற்கான ேசர்க்கை 31.7.2023-ந்தேதி வரை நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வரும்போது தங்கள் அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவற்றை நேரில் கொண்டு வர வேண்டும்.

    தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.50 விண்ணப்பதாரர் நேரடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.
    • 22 அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாகதொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 22 அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்துஅமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 என்றநவீன தொழிற்சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக டாடா குழுமத்துடன் தமிழக அரசு தொழில் 4.0 என்ற தொழில் பயிற்சியின் மூலம் அதிநவீன தொழில்நுட்ப அறிவினை அடித்தட்டு சமுதாயத்திலிருந்து வரும் பயிற்சியாளர்களும் பயிற்சி பெறவேண்டும் என்ற உன்னத தொலை நோக்கோடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசானது ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் 22 அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும்பயிற்சியாளர்கள் பயனடையும் வகையில், ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் தொழில்4.0 டெக்னாலஜி சென்டர் அதிநவீன கணனிமயமாக்கப்பட்ட தொழிற் பிரிவுகள் அட்வான்ஸ் சி.என்.சி., மிஷினிங் டெக்னீசியன்,இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் ,டிஜிட்டல் மேனுபாட்சரிங் டெக்னீசியன், பேசிக்டிசைனர் ,விர்ச்சுவல் வெரிபையர் (மெக்கானிக்), மேனுபேச்சரிங் பிராசசஸ்கண்ட்ரோலர், ஆட்டோ மேஷன் துவக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

    இதன் மூலம் இப்பகுதியிலுள்ள உள்ள ஏழை, எளிய மாணவர்கள் , மாணவிகள் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதை உறுதி செய்யப்படுவதுடன், அவர்களது வாழ்வின் தரம் உயர்ந்து சமுதாயத்திற்கு பெரும் பயனாக இத்திட்டம் வழிவகை செய்கிறது. தற்போது இப்பயிற்சி நிலையம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டையில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

    அதனைத்தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தாராபுரம் பொள்ளாச்சி மெயின்ரோடு, அம்மா பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் முத்தமிழறிஞர்டாக்டர்.கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் , மண்டல இணை இயக்குநர் முஸ்தபா, திருப்பூர் மாநகராட்சி 4-ம்மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத் தலைவர் பாப்புகண்ணன், முதல்வர் (தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம்) பிரபு,தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் செந்தில்குமார், மாணவ, மாணவிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொ

    • பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
    • விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் மாத உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டம், திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதில், பல்வேறு பொறியியல், மேம்பட்ட தொழில்நுட்ப படிப்புகளான மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர இணையதளம் மூலம் அல்லது தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று உதவி சேவை மையத்தை அணுகலாம்.

    அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவா்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் மாத உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். மேலும் குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு டூல் கிட், தையல் இயந்திரம் விலையில்லாமல் வழங்கப்படும்.

    பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். ஆகவே விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் ஜூன் 7 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94990-55695, 94990-55700, 94990-55689 ஆகிய செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

    • ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 25ந்தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மீதமுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 25ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதில் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். 14 வயது முதல் 40 வயது வரையில் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை.

    அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன் அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. ஆகவே மாணவா்கள் இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 25ந்தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0421-2230500 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டூல் அண்டு டைமேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
    • வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கைவினைஞர் பயிற்சி திட்டமாக மாற்றப்பட்ட தொழிற் பிரிவுகளில் இரண்டு முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பிட உள்ளன.

    1. டூல் அண்டு டைமேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் /சீர் மரபினர். முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி. டூல் அண்டுடை மேக்கர் தொழிற் பிரிவு (பிடி. ஜே&எப்) கல்வித் தகுதி ஆகும்.

    2. வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி. வயர்மேன் தொழிற்பிரிவு கல்வித் தகுதி ஆகும்.

    என்.டி.சி. ஆக இருப்பின் 3 வருட தொழிற்சாலை அனுபவம், என்.ஏ.சி. ஆக இருப்பின் இரண்டு வருட தொழிற்சாலை அனுபவமும் அதே தொழிற் பிரிவில் இருக்க வேண்டும்.

    பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ. முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வரை ஆகும். 12ம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ. முடித்தவர்கள் டிப்ளமா ,டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. தகுதியான தற்காலிக ஒப்பந்த பயிற்றுநருக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிப்பட நகல்களுடன் தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தாராபுரம்-638 657 என்ற முகவரிக்கு வரும் 30.8.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இத்தகவலை தாராபரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர் தெரிவித்துள்ளார்.  

    ×