என் மலர்
நீங்கள் தேடியது "Congressmen’s"
- சுதந்திரதினபவள விழாவையொட்டி வாடிப்பட்டியில் காங்கிரசார் பாதயாத்திரை நடத்தினர்.
- வாடிப்பட்டி, சல்லக்குளம், கருப்பட்டி, இரும்பாடி வழியாக சென்று சோழவந்தான் காமராஜர்சிலையை அடைந்தது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திரதினபவள விழாவையொட்டி பாதயாத்திரை நடந்தது.
மாவட்டத்தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரதலைவர் முருகானந்தம், மாவட்டத்துணைத்தலைவர் செல்வக் குமார், துரைப்பாண்டி, வட்டாரத்தலைவர் பழனிவேல், ராயல், காந்தி சவுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். ஊடகபிரிவு தொகுதிதலைவர் வையாபுரி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நூர்முகமது தொடங்கி வைத்தார்.
வாடிப்பட்டி, சல்லக்குளம், கருப்பட்டி, இரும்பாடி வழியாக சென்று சோழவந்தான் காமராஜர்சிலையை அடைந்தது. இதில் மனிதஉரிமை மாவட்டத்தலைவர் ஜெயமணி, ஒ.பி.சி.அணி மாவட்டத் தலைவர் முருகன், முன்னாள் சேர்மன் திலகராஜ், அமைப்புசாரா தொழிலாளர் அணிமாநிலதலைவர் மகேஸ்வரன், சோனைமுத்து, வரிசைமுகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் நவீன்குமார் நன்றி கூறினார்.