என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை துறைமுகம்"

    • 142 ஆண்டுகள் பழமையான சென்னை துறைமுகம் சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளது.
    • பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்து உள்ளார்.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    142 ஆண்டுகள் பழமையான சென்னை துறைமுகம் சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இத்துறைமுகம் இருந்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த நிதி ஆண்டில் ரூ. 156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள முக்கிய திட்டங்களை விரைவாக முடித்திட அனைத்து அதிகாரிகளும் உறுதுணையாக இருந்து பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் வரை அமைக்கப்பட உள்ள ஈரடுக்கு மேம்பால திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேட்டில் ரூ.1400 கோடி மதிப்பீட்டிலான பல்நோக்கு சரக்குகள் கையாளும் முனையம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த ஓராண்டுக்கு முன் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கன்டெய்னர் பெட்டி விழுந்து விபத்துக்குள்ளானது.

    அதிக எடை கொண்ட கன்டெய்னர் விழுந்ததில், கீழே வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கிரேன் மூலம் கன்டெய்னரை தூக்கியபோது கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காளை மாட்டுக் கறிக்கு, எருமை மாட்டுக் கறி என உத்தரபிரதேச கால்நடைதுறை சான்று.
    • ஆய்வுக்கு அனுப்பி, காளை மாட்டுக் கறி என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

    சென்னையில் துறைமுகத்தில், எருமை மாட்டுக் கறி என கூறி, 28 மெட்ரிக் டன் காளை மாட்டுக் கறியை ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததை தொடர்ந்து மாட்டிறைச்சி ஏற்றுமதியை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

    காளை மாட்டுக் கறிக்கு, எருமை மாட்டுக் கறி என உத்தரபிரதேச கால்நடைதுறை சான்று அளித்திருந்தது.

    சந்தேகத்தின்பேரில், இறைச்சியை ஆய்வுக்கு அனுப்பி, காளை மாட்டுக் கறி என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

    இதைதொடர்ந்து, தவறான தகவலை கூறி, ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாக, டெல்லியை சேர்ந்த யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது சுங்கவரி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை அடுத்து, யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன மேலாளர் முகமது காலித் ஆலம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

    • காரில் இருந்த கடற்படை வீரர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
    • கார் டிரைவர் முகமது சகி கடலில் விழுந்து மாயமானார்.

    சென்னை:

    சென்னை துறைமுகத்தில் கடற்படை வீரர்களை அழைத்து வர நேற்று இரவு கார் சென்றது. அந்த காரை முகமது சகி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார்.

    துறைமுகத்தில் வீரர்களை ஏற்றிக்கொண்டு ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலில் விழுந்தது. இதையடுத்தும் காரில் இருந்த கடற்படை வீரர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

    ஆனால், கார் டிரைவர் முகமது சகி கடலில் விழுந்து மாயமானார். அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    அதேவேளை, காயமடைந்த கடற்படை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    • சென்னை துறைமுகத்தில் வீரர்களை ஏற்றிக்கொண்டு ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலில் விழுந்தது.
    • காயமடைந்த கடற்படை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சென்னை துறைமுகத்தில் கடற்படை வீரர்களை அழைத்து வர நேற்று முன்தினம் இரவு கார் சென்றது. அந்த காரை முகமது சகி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார்.

    துறைமுகத்தில் வீரர்களை ஏற்றிக்கொண்டு ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் கடற்படை வீரர் ஒருவரை காயங்களுடன் உயிர் தப்பினார்.

    ஆனால், கார் டிரைவர் முகமது சகி காருடன் கடலில் மாயமானார். அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், கடலில் மூழ்கிய காரை மீட்டனர்.

    ஆனால், காருக்கும் முகமது சகி இல்லாதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, முகமது சகியை மீட்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், காருடன் கடலில் விழுந்த ஓட்டுனர் முகமது சகி கடலமாக மீட்கப்பட்டார். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதேவேளை, காயமடைந்த கடற்படை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    • கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சென்னை துறைமுகம் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
    • சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த பங்களிப்பாளர்களின் முயற்சிகளை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் பாராட்டினார்.

    சென்னை:

    சென்னை துறைமுகம் கடந்த 2024-ம் ஆண்டு 5.326 மில்லியன் மெட்ரிக் டன் மாதாந்திர சரக்கு போக்குவரத்தை கையாண்டுள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சென்னை துறைமுகம் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த பல்வேறு பங்களிப்பாளர்களின் முயற்சிகளை சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் சுனில் பாலிவால் பாராட்டினார்.

    • டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை பட்டாணி இறக்குமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் உதவியதாக குற்றம்சாட்டினார்.
    • துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி 4 கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை துறைமுகம் வழியாக ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் மசூர் பருப்பு என கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை பட்டாணி இறக்குமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் உதவியதாக குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து பச்சை பட்டாணி இறக்குமதி செய்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறை நடத்திய சோதனையில் ரூ.60 லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி 4 கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (DGFT) தற்போதைய கொள்கையின்படி, கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சைப் பட்டாணியை இறக்குமதி செய்ய முடியும், குறைந்தபட்ச இறக்குமதி விலை கிலோவுக்கு ரூ.200 (MIP) ஆகும். மஞ்சள் பயறு வகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அதை மசூர் பருப்பாக தவறாக அறிவித்ததாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை, ஸ்ரீஹரிகோட்டா, காரைக்கால் ஆகிய 4 இடங்களில் உள்ள ரேடார்களின் தரவுகள் மூலம் தமிழகத்துக்கான வானிலை கணிக்கப்படுகிறது.
    • இதில் சென்னை துறை முகத்தில் உள்ள ரேடார் பிரதான ரேடாராக உள்ளது. இது ‘எஸ்’ பேண்ட் வகையைச் சேர்ந்ததாகும்.

    சென்னை:

    தமிழகத்தில் மழை பற்றிய தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

    இந்த மழை பற்றிய தகவல்களை கணிக்க பயன்படுவதில் ரேடார் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மழை மேகங்களின் தன்மை, மேகங்களின் நகரும் திசை, மேகங்கள் கொடுக்க வாய்ப்புள்ள மழை அளவு போன்றவற்றை ரேடார் மூலம் கிடைக்கும் தரவுகளை கொண்டு சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

    இந்த ரேடார்களில் இருந்து செலுத்தப்படும் மின்காந்த அலைகள் மூலமாக கிடைக்கும் தரவுகள் மூலம் குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு, தற்போதைய மழை நிலவரம் போன்றவற்றை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது.

    இதன் மூலம் மாநகராட்சி, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அரசு துறைகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும் இந்த வானிலை எச்சரிக்கை அறிவிப்பை கேட்டு அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிட்டு வருகிறார்கள்.

    வானிலை தொடர்பான ரேடார் படங்கள் வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. http://mausam.imd.gov.in என்ற இணைய தளத்தில் இதை பொதுமக்கள் பார்த்து வருகிறார்கள்.

    தற்போது சமூக வலைதளங்கள் அதிகரித்துள்ளதால் ரேடார் படங்களை பயன்படுத்தி தனியார் வானிலை ஆர்வலர்கள் வானிலையை கணித்து பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்றவற்றில் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இதன் மூலம் பொதுமக்கள் மத்தியிலும் வானிலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய இணைய தளத்தில் ரேடார் படங்களை பொதுமக்களே நேரடியாக பார்த்து தற்போதைய வானிலையை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

    சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை, ஸ்ரீஹரிகோட்டா, காரைக்கால் ஆகிய 4 இடங்களில் உள்ள ரேடார்களின் தரவுகள் மூலம் தமிழகத்துக்கான வானிலை கணிக்கப்படுகிறது.

    இதில் சென்னை துறை முகத்தில் உள்ள ரேடார் பிரதான ரேடாராக உள்ளது. இது 'எஸ்' பேண்ட் வகையைச் சேர்ந்ததாகும். இந்த ரேடார் சுமார் 400 கிலோ மீட்டர் சுற்றளவு வரை மழை மேகங்களை கண்காணிக்கும் திறன் உடையது. இந்த ரேடார் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடார் பழுதடைந்தது. இந்த ரேடாருக்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால் பழுது நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுமார் 4 ஆண்டுகளாக இந்த ரேடார் செயல்படாமல் இருந்தது.

    இதை பழுது பார்ப்பதா? அல்லது புதிதாக வாங்குவதா? என்று டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய தலைமையகம் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரேடாரை பழுது பார்ப்பதும் தள்ளிப் போடப்பட்டது.

    எனவே தற்போதைய மழை நிலவரங்களை வானிலை ஆய்வு மையமும், பொதுமக்களும் அறிவதில் சிக்கல் ஏற்பட்டது. பல நேரங்களில் கணிக்க முடியாத அளவுக்கு பலத்த மழை பெய்தது.

    இந்த நிலையில் சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள ரேடாரை பழுது பார்க்கும் பணி முடிவடைந்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த ரேடார் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    • எதிர்கால திட்டங்கள் குறித்து துறைமுக பொறுப்பு கழக தலைவர் விளக்கம்.
    • மீனம்பாக்கம் விமான சரக்கு முனையத்தில் சுதந்திர தின விழா.

    சென்னை துறைமுகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. தண்டையார் பேட்டையில் உள்ள சென்னை துறைமுக வீட்டு வசதி காலனியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில், துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பானிவால் தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போது பேசிய அவர், துறைமுகத்தின் எதிர்கால திட்டங்கள், சாதனைகள், ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கினார். கப்பல் போக்குவரத்துத்துறை துறைமுகத்தின் முன்னேற்றத்திற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

    சென்னை விமான நிலைய சுங்கத்துறை சார்பில், மீனம்பாக்கத்தில் உள்ள விமான சரக்கக வளாகத்தில் சுதந்திர தின விழா, இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் கே ஆர் உதயபாஸ்கர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அணி வகுப்பு மரியாதையையும், முதன்மை ஆணையர் ஏற்றுக்கொண்டார்.

    ×