search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட மேஸ்திரி"

    • ஆதையாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
    • பரிசோ தித்த டாக்டர் வரும் வழியிலேயே ஆதையா இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி, எடப்பாளையம், யாதவா கோவில் வீதியை சேர்ந்தவர் ஆதையா (51). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஆதை யாவுக்கு வேறு ஒரு பெண்ணு டன் தொடர்பு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் தன் குடும்பத்தை பிரிந்து அந்த பெண்ணுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள பாலக்காட்டூர் பகுதி யில் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆதையாவும், அவருடன் வசித்து வந்த பெண்ணும் பாலக்காட்டூர் காலிங்கராயன் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்துள்ளனர்.

    அப்போது ஆதையாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர் வரும் வழியி லேயே ஆதையா இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வெள்ளக்கோவில் சாலையிலுள்ள ஓடைப்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
    • பொதுமக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    வெள்ளகோவில் :

    முத்தூா்- வெள்ளக்கோவில் சாலையிலுள்ள நம்பகவுண்டன்பாளையம் கரையூரைச் சோ்ந்தவா் கிரி (வயது 40). இவா் முத்தூரிலுள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரியாக வேலை செய்து வந்தாா்.

    இந்நிலையில், வெள்ளக்கோவில் சாலையிலுள்ள ஓடைப்பாலம் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.அப்போது, முத்தூா் நோக்கி வந்த காா் கிரி மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.உயிரிழந்த கிரிக்கு மனைவி சுவேதா, குழந்தைகள் முகிலன் (10), அகிலன் (7) ஆகியோா் உள்ளனா்

    • காயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • வடக்கு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காலேஜ் ரோடு கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 35). இவர் கட்டிட மேஸ்திரி. இவருடன் கட்டிட தொழிலாளியாக மாஸ்கோ நகரை சேர்ந்த சரவணன் (35) என்பவர் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சரவணன், தனியாக சென்று கிருஷ்ணனுக்கு தெரிந்தவரிடம் இருந்து தனக்கு கட்டிட வேலை கொடுக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் தனது வேலைக்கு போட்டியாக சரவணன் செயல்படுவதை கிருஷ்ணன் கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லம்பாளையத்தில் கிருஷ்ணன் நின்றபோது அங்கு சரவணன் வந்துள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சரவணன், அரிவாளால் கிருஷ்ணனின் முதுகு, தொடை பகுதிகளில் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வடக்கு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    ×