search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிகாரம்"

    • துபாயில் வசித்துவரும் இந்திய சிறுவனை அவனது நன்னடத்தைக்காக துபாய் போலீசார் பாராட்டினர்.
    • இதுதொடர்பான புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    துபாய்:

    துபாயில் வசித்து வரும் இந்திய சிறுவன் ஒருவன் அவனது நன்னடத்தை செயலுக்காக துபாய் போலீசாரால் பாராட்டப்பட்டார்.

    துபாய்க்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் அவரது கைக்கடிகாரத்தை அங்கு தொலைத்துள்ளார். அந்த கடிகாரத்தை இந்தியாவை சேர்ந்த சிறுவன் யூனிஸ் பார்த்துள்ளார். அதை எடுத்துச்சென்று போலீசிடம் ஒப்படைத்தார்.

    அந்த பயணி அவரது சொந்த ஊர் திரும்பிய நிலையில், மீண்டும் அவரை தொடர்பு கொண்டு துபாய் போலீசார் கடிகாரத்தைக் கொடுத்துள்ளனர். இதற்கு அந்த பயணி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில், சுற்றுலா காவல்துறை இயக்குநர் பிரிகேடியர் கல்பான் ஒபைத் அல் ஜலாப், துணை லெப்டினன்ட் கர்னல் முகமது அப்துல் ரகுமான், சுற்றுலா துறை தலைவர் கேப்டன் ஷஹாப் அல் சாடி ஆகியோர் இந்திய சிறுவன் யூனிஸை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.

    இதுதொடர்பான புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், சுற்றுலா பயணியின் தொலைந்த கடிகாரத்தை திருப்பி அளித்த சிறுவனின் நேர்மையை துபாய் போலீஸ் கவுரவிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

    • டப்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
    • அரசு பள்ளியில் முதல் முறையாக அபாகஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழதென்பாதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்ப ள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு தேவையான சேர்கள், பிளாஸ்டிக் குடம், டப்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சீர் வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயந்தியிடம் வழங்கினர்.

    தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளியில் முதல் முறையாக அபாகஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கியதோடு 50 மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் வகுப்பு கட்டணத்தையும் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ரம்யாதனராஜ் வழங்கினார். அப்போது தி.மு.க நிர்வாகி ஒப்பந்ததாரர் தனராஜ் உடன் இருந்தார்.

    ×