search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேக்வாண்டோ போட்டி"

    • டேக்வாண்டோ போட்டிகளில் சுமார் 34 பள்ளிகளை சேர்ந்த 480 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • தலைமை ஆசிரியர் உமாநாதன் மற்றும் தாளாளர் செண்பகநாதன் பாராட்டினர்.

    நாகர்கோவில், நவ.22-

    கன்னியாகுமரி டேக்வாண்டோ அகடாமி சார்பில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் சுமார் 34 பள்ளிகளை சேர்ந்த 480 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    இதில் தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியை சேர்ந்த ருஷ்வந்த் குமார், கிருத்திகா, அஸ்லி பிளசிங், சுகேஷ், அஸ்வின் குமார் போன்றவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றனர். இவர்களை அவர்களது வகுப்பு ஆசிரியர்கள் நிஷா, வனிஷா, விஜி, அஜிதா, தலைமை ஆசிரியர் உமாநாதன், துணை தலைமை ஆசிரியர் மதிமகாதேவன் மற்றும் தாளாளர் செண்பகநாதன் பாராட்டினர்.

    • டேக்வாண்டோ போட்டி திருப்பூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
    • பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பாராட்டினார்.

    திருப்பூர் :

    மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் அசத்தினர்.

    தமிழக மேற்கு மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி திருப்பூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், பிரன்ட்லைன் பள்ளி மாணவ ர்கள் பங்கேற்று தங்கம், வெண்கல பதக்கங்களை வென்றிருந்தனர். குழு பிரிவில், மாணவர் சந்திரேஷ் தங்கமும், ஒற்றையர் பிரிவில், ரிஸ்வான்ட் வெண்கலம் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து வீரர்கள் 20 பேர் கலந்து கொண்டனர்.
    • தங்கம் வென்ற வீரனுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரியைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி 27. இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக டேக்வாண்டோ பயிற்சி பெற்று 2019 மற்றும் 2022-ல் இருமுறை சர்வதேச அளவில் பதக்கம் பெற்றுள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த தேசிய அலுவலக டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு தேர்வானார்.

    இதனையடுத்து சர்வதேச அளவிலான 14வது சிகே கிளாசிக் இன்டர்நேஷனல் ஓபன் டேக்வாண்டோ போட்டி மலேசியாவில் 4 நாட்கள் நடந்தது.

    இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து வீரர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்திலிருந்து தீபன் சக்கரவர்த்தி ஒருவர் மட்டும் கலந்து கொண்டார்.

    பூம்சே கிரோகி ஆகிய இரு பிரிவுகளில் பங்கேற்ற தீபன் சக்கரவர்த்தி தலா ஒரு தங்கம், வெள்ளி பதக்கம் வென்றார். இவருடன் மேலும் 3 இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர். தங்கம் வென்ற தீபன் சக்கரவர்த்தி நேற்று தருமபுரி பேருந்து நிலையத்துக்கு வந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து பட்டாசு வெடித்து மாலை அணிவித்து பொன்னாடை போற்றி உறவினர்கள் பொதுமக்கள் பயிற்சியாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    தருமபுரி மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளர் மற்றும் பயிற்சியாளர் சுதாகர், திமுக முன்னாள் நகர மன்ற தலைவர் சிட்டிமுருகேசன், ஆகியோர் போட்டியில் தங்க வென்ற வீரருக்கு பொன்னாடை போற்றி இனிப்புகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாபு, உறவினர்கள், நண்பர்கள் பயிற்சியாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் தங்கம் வென்ற வீரனுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    ×