என் மலர்
நீங்கள் தேடியது "ஜில் பைடன்"
- இரு நாடுகளின் பொருளாதாரம் வலுவாக இருக்க, இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்கால இளைஞர்களுக்காக முதலீடு செய்ய வேண்டும்.
- இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை நிலையான மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும்.
அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் நேற்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். மேலும், இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து, பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்டார். பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் என்ற விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு மற்றும் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரது வருகையை குறிக்கும் வகையில் இரு நாட்டு தேசிய கீதங்கள் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன. அங்கு பிரதமர் மோடி இரண்டு சிறு குழந்தைகளிடமிருந்து ஒரு பூங்கொத்தை பெற்றார்.
இதைதொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். இருவரும் வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளைக்குச் சென்றனர். அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'எதிர்காலத்திற்கான திறன்' என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, "ஒருபுறம் அமெரிக்காவில் உயர்தர கல்வி நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. மறுபுறம், இந்தியா உலகின் மிகப்பெரிய இளைஞர் தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. அதனால்தான், இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை நிலையான மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
பின்னர் ஜில் பைடன் பேசியதாவது:-
இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிணைப்பின் அடிப்படைக் கல் கல்வி. நாடுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கற்று வளர்கின்றன. தாங்கள் ஆக விரும்பும் மக்களைக் கண்டறிந்து, ஒன்றாக சிறந்த உலகத்தை உருவாக்குகின்றன. ஒன்றாக உழைத்தால், நமது நாடுகள் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான, வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
இரு நாடுகளின் பொருளாதாரம் வலுவாக இருக்க, இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்கால இளைஞர்களுக்காக முதலீடு செய்ய வேண்டும்.
பல ஆண்டுகளாக உறவுகளை வலுப்படுத்திய பிறகு, உலகளாவிய சவால்களை நாங்கள் கூட்டாகச் சமாளிப்பதால், அமெரிக்க- இந்திய கூட்டாண்மை ஆழமானது மற்றும் மதிப்புமிக்கது.
அனைத்து இந்தியர்களும், குறிப்பாக பெண்கள் கல்வியைத் தொடரவும், அவர்களுக்குத் தேவையான திறன்களைப் பெறவும் வாய்ப்பு இருப்பதை உறுதிசெய்ய நீங்கள் (மோடி) உழைக்கிறீர்கள்.
நவீன பணியாளர்கள், எங்கள் பள்ளிகள் மற்றும் வணிகங்கள் இங்குள்ள மாணவர்களுக்காக உருவாக்கி வரும் சில புதுமையான திட்டங்களை உங்களுக்குக் காண்பிப்பது உற்சாகமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது.
- ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்திருந்தாலும் நாள்தோறும் அவருக்கு பரிசோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது. இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இசைந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை மறுநாள் அதாவது 7-ந்தேதி இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்திருந்தாலும் நாள்தோறும் அவருக்கு பரிசோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.
- அதிபர் ஜோ பைடனுக்கு செதுக்கப்பட்ட சந்தனப் பெட்டி, சிலை, எண்ணெய் விளக்கு பரிசளித்தார்
- இந்தியா சார்பில் அந்த பயணத்தின்போது சுமார் $35,000 [சுமார் 32 லட்சம்] மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குடும்பத்துக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளில் விலை உயர்ந்தது பிரதமர் மோடி அளித்த பரிசுதான் என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பெற்ற பரிசுப் பொருள்களின் விவரங்களை அந்நாட்டின் வெளியுறவுத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த ரூ. 17 லட்சம் (20 ஆயிரம் டாலர்) மதிப்புள்ள 7.5 காரட் வைரம்தான், ஜில் பைடன் பெற்ற பரிசுகளிலேயே விலை உயர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.

உக்ரைன் தூதர் அளித்த ப்ரூச் எனப்படும் எந்த உடையிலும் அணிந்துகொள்ளும் 14,063 டாலர் மதிப்புள்ள நகை இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனது அமெரிக்க பயணத்தின்போது பிரதமர் மோடி இந்த வைரைத்தை ஜில் பைடனுக்கு பரிசளித்தார். மேலும் அதிபர் ஜோ பைடனுக்கு செதுக்கப்பட்ட சந்தனப் பெட்டி, சிலை, எண்ணெய் விளக்கு மற்றும் 6,232 டாலர் மதிப்புள்ள 'தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள்' என்ற புத்தகத்தையும் மோடி பரிசாக அளித்தார்.


மொத்தத்தில், அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா சார்பில் அந்த பயணத்தின்போது சுமார் $35,000 [சுமார் 32 லட்சம்] மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார்.
- 2-வது முறையாக அவர் கொரோனோவால் பாதிக்கபட்டு உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன். இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஜில் பைடன் டெலோவெலில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஏற்கனவே இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார்.
தற்போது 2-வது முறையாக அவர் கொரோனோவால் பாதிக்கபட்டு உள்ளார். ஜோபைடைனுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
- ஜோ பைடன் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
- இரண்டு வார இடைவெளியில் ஜில் பைடனுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் ஜோ பைடன் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தற்போது அவரின் மனைவிக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், உரிய சிகிச்சையை எடுத்து வருகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.