என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாரத் மாண்டிசோரி பள்ளி"
- மாணவி காளி பிரியா அண்ணாமலையார் தீப பாடலுக்கு நடனமாடினார்.
- நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தினர்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியில் கார்த்திகை தீபத் திருநாள் கொண் டாட்டம் நடைபெற்றது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் பால சுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஷைனி பிரீத்தி வரவேற்று பேசினார். மாணவி குங்கும காயத்ரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி காளி பிரியா அண்ணாமலையார் தீப பாடலுக்கு நடனமாடி னார். மாணவி ரட்சனா கார்த்திகை பண்டிகையின் சிறப்பினை பற்றி பேசினார். மாணவர் ஜீவா கார்த்திகை தீபம் குறித்து கவிதை கூறினார்.
நிகழ்ச்சியில் பிளஸ்-2 வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சுமதி, 10-ம் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வலிங்கம், கணித ஆசிரியர் சரவணன், 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகள் குழு வாக இணைந்து தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தினர். முடிவில் மாணவி ரேணுகா தேவி நன்றி கூறினார். ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், கல்வி ஆலோ சகர் உஷா ரமேஷ், இயக்கு னர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
- மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆடை அலங்கார அணிவகுப்பினை நடத்தினர்.
- 6, 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் குழு நடனமும் அரங்கேற்றப்பட்டது.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. மாணவி ஹர்ஷிதா ஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி ஆஹிலா வரவேற்று பேசினார். இதில் மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து உபயோகமற்ற காகிதங்களை மறுசுழற்சி செய்யும் விதமாக பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆடை அலங்கார அணிவகுப்பினை நடத்தினர். மாணவி காளிபிரியா பரதநாட்டியம் ஆடினார். 6, 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் குழு நடனமும் அரங்கேற்றப்பட்டது.
9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து கிருஷ்ண பெருமான், பூமாதேவியர் நரகாசுரனை வதம் செய்த நிகழ்ச்சியை நாடகமாக நடித்து காட்டினர். சுற்றுச்சூழல் மாசு இல்லாத தீபாவளி பண்டிகை கொண்டாடும் முறையை பற்றி பிளஸ்-1 மாணவர்கள் மவுன நாடகம் நடித்து காட்டினர். முடிவில் மாணவி ஸ்ரீனிகா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
- கூட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவி சிவானி கிராமசபை கூட்டத்தின் செயலாளராக கலந்து கொண்டார்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் பஞ்சாயத்து ராஜ் கிராம சபை விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் வளாகத்தில் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவன் தேவேஷ் விவசாயி போல பாரம்பரிய ஆடையினை அணிந்து வேளாண்மை தொழிலில் உள்ள பிரச்சினைகள், சுற்றுப் புறத்தினை தூய்மையாக வைத்திருக்கும் முறை குறித்து எடுத்துரைத்தான்.
6-ம் வகுப்பு மாணவி மிருதுளா ஜனனி கிராம பகுதியினை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைப்பது பற்றி விளக்கி கூறினார். கிராம சபை கூட்டத்தின் தலைவராக மாணவி காளிபிரியா கலந்து கொண்டு வேளாண்மை தொழிலை திறம்பட செய்வதற்க்கான ஆலோசனைகளை வழங்கி, சுற்றுபுறத் தூய்மையின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். மாணவி சிவானி கிராமசபை கூட்டத்தின் செயலாளராக கலந்து கொண்டார். மேலும் சுற்று புறதூய்மையை பாதுகாக்கும் விதமாக மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து பள்ளியின் வளாகத்தை தூய்மைபடுத்தினர்.
- 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் யுவராஜ், நித்தின் அபினேஷ் தங்க பதக்கம் வென்றனர்.
- தங்க பதக்கம் வென்ற 6 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள அச்சம்பட்டி எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகள் நடைபெற்றது. டேக்வோண்டோ போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர் தேவேஷ் காளிதாஸ் தங்க பதக்கமும், சுபாஷினி வெள்ளி பதக்கமும் , பிரணவ், ஜீவா, மாணவி ஹர்சிதா ஸ்ரீ ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் யுவராஜ் மற்றும் நித்தின் அபினேஷ் தங்க பதக்கம் வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோகுல சுதன், திருமலைவிஸ்வா, சிவபிரதீப் ஆகியோர் தங்க பதக்கம் பெற்றனர்.
மேலும் மாணவர் செண்பகநாதன் வெள்ளி பதக்கமும், ஜெய்சன் நீல் வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஜீடோ போட்டியில் மாணவர் மகேஷ் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தார். டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் வென்ற 6 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.
- மாணவி ரபியாஸனா நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி உரையாற்றினார்.
- நிகழ்ச்சியில் மாணவி மும்தாஜ் குர் ஆன் வாசித்தார்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மிலாடிநபி பண்டிகை கொண்டாடப்பட்டது. மாணவி ஹரிணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஆப்ரின் ஹாஜராள் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாணவி ரபியாஸனா நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி உரையாற்றினார். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் முகம்மது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி நாடகமாக நடித்து காட்டினர். மாணவி மும்தாஜ் குர் ஆன் வாசித்தார். மாணவி சஞ்சுஸ்ரீ நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
- யு.கே.ஜி. மாணவர் முகுந்தன் சுப பைரவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- விழாவில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு குரு சமர்ப்பணம் செய்தனர்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியர் தினவிழாவினை முன்னிட்டு குரு சமர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். முன்னதாக மாணவி அனுபாமா, ஹரிணி இறைவணக்கப் பாடல் பாடினர். ராபியாஸனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். இதில் யு.கே.ஜி. மாணவர் முகுந்தன் சுப பைரவ் டாக்டர் ராதாகிருஷ்ணன் போல் வேடமணிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மழலையர் பிரிவு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் டாக்டர் ராதாகிருஷ்ணன் போல வேடமணிந்து வந்திருந்தனர். மேலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் மகாபாரதம், ராமாயண கதாபாத்திரங்கள் வேடமணிந்து யாகசாலை அமைத்து இறைவழிபாடு நடத்தினர். தொடர்ந்து 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு குரு சமர்ப்பணம் செய்தனர். முடிவில் மாணவி ரட்சனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
- கிருஷ்ணர் மண் உண்ட லீலையை மாணவ-மாணவிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
- மழலையர் பிரிவு மாணவ- மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து உலா வந்தனர்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. மாணவி ஸ்வேதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். மாணவி காளிபிரியா பரதநாட்டிய நடனமாடினார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ண லீலைகளில் ஒன்றான கிருஷ்ணர் மண் உண்ட லீலையை மாணவ-மாணவிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர். இதில் மழலையர் பிரிவு மாணவர் ரித்விக் விஸ்வா கிருஷ்ணராகவும், மாணவி குங்கும காயத்ரி யசோதாவாகவும் வேடமணிந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவி மிருதுளா ஜெனனி குழுவினர் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா என்ற பாடலுக்கு நடனமாடினர். மழலையர் பிரிவு வகுப்பு மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் மற்றும் ராதை போல் வேடமணிந்து உலா வந்தனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியைகள் மஞ்சுளா, பார்வதி ஆகியோர் மாகோலமிட்டு பள்ளியை அலங்கரித்தனர். மாணவி ரட்சனா நன்றிகூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
- நிகழ்ச்சியினை மாணவி ஹரிணி மலையாளத்தில் தொகுத்து வழங்கினார்.
- ஆசிரியை ஜோஸ்பின் சினேகா ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்து பேசினார்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியினை மாணவி ஹரிணி மலையாளத்தில் தொகுத்து வழங்க, மாணவி ஸ்வேதா அதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் கணினி அறிவியல் ஆசிரியை ஜோஸ்பின் சினேகா மற்றும் மாணவர் அத்வைத் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி ரக்சனா வரவேற்று பேசினார்.
ஆசிரியை ஜோஸ்பின் சினேகா ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்தும், மாணவர் அத்வைத் ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்தும் மலையாளத்தில் பேசினர். மாணவி காளிபிரியா ஓணம் குறித்த சிறப்பு பாடலுக்கு நடனமாடினார். மழலையர் பிரிவு மாணவர்கள் ஓணம் பண்டிகையினை உணர்த்தும் விதமாக பாரம்பரிய ஆடைகளை அணிந்து அணிவகுத்து நின்றனர்.
நிகழ்ச்சியில் வாமன அவதாரம் தோன்றிய வரலாறு மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கான காரணத்தை காட்சிப்படுத்தினர். இதில் மாணவன் பாலசேஷன் வாமனன் போலவும், சரவணராஜா மன்னன் மகாபலி சக்கரவர்த்தி போலவும் வேடமணிந்து பாடல் பாடியும், நடித்தும் காட்டினர். மாணவன் அதீப் வாமன அவதார காட்சியை பற்றி விவரித்து கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மஞ்சுளா, ரகுமாள் ஜீனுபியா, ஜோஸ்பின் சினேகா, சாஜாதீசாபிரா, பிலோமினா ஜான்சி ஆகியோர் குழுவாக இணைந்து மலரினை வைத்து அத்தப்பூ கோலமிட்டனர்.
ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
- புதன்கிழமை 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய சின்னங்களை பற்றி பேசினர்.
- மாணவி கார்த்திகா திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்று குறித்து எடுத்துரைத்தார்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒரு தேசதலைவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நாட்டிற்காக செய்த தியாகம், பங்களிப்பு போன்ற நிகழ்ச்சி களானது நடைபெற்றது.
வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமை காந்தி வாழ்க்கை வரலாறு, செவ்வாய்க்கிழமை நாட்டின் சுதந்திர தினவிழா, புதன்கிழமை தேசிய சின்னங்களின் முக்கியத்துவம், வியாழக்கிழமை பாரதியாரின் விடுதலைப் போராட்டத்தின் பங்களிப்பு, வெள்ளிக்கிழமை கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறு, சனிக்கிழமை கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் விடுதலை வேட்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர். காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றி மாணவன் சப்வான் பேசினார். மாணவி சைனி ப்ரீத்தி காந்தியின் குடும்ப உறுப்பினர்களை பற்றியும் அவர்களின் தியாகம் பற்றிய கருத்து க்களை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் காந்தி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் போல்வேடம் அணிந்தனர். நாட்டின் சுதந்திர தினவிழாவானது தேசிய கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. புதன்கிழமை 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய சின்னத்தினை போற்றும் வகையில் மலர் போன்று குழுவாக அணிவகுத்து நின்று தேசிய சின்னங்களை பற்றி பேசினர்.
வியாழக்கிழமை விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்கு குறித்து மாணவி நித்யஸ்ரீ பேசினார். மாணவன் பாலசேஷன் பாரதியார் போல் வேடம் அணிந்திருந்தார். வெள்ளிக்கிழமை கொடிகாத்த குமரன் தியாகத்தினை போற்றும் வகையில் மாணவன் கோதண்டராமன் அவரைப் போல வேடம் அணிந்து பேசினார். மாணவி கார்த்திகா திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்று குறித்து எடுத்துரைத்தார்.
சனிக்கிழமை வ.உ. சிதம்பரனாரின் விடுதலை வேட்கையை எடுத்துரைக்கும் விதமாக அவரைப்போல வேடமணிந்து மாணவன் ஸ்ரீஜித் வ.உ.சி. வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறினார். வாரம் முழுவதும் நடைபெற்ற விடுதலைப் போராட்ட தியாகிகளின் நினைவுகளை நிகழ்ச்சிகள் மூலம் அரங்கேற்றப்பட்டது.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தமிழ் ஆசிரியர்கள் மஞ்சுளா, தங்கம்மாள் மற்றும் மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதா பிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.
- 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, கையெழுத்துப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்கான போட்டிகளானது புத்தகத்தை மையமாக கொண்டு பல்வேறு போட்டிகளானது நடைபெற்றது.
எல்.கே.ஜி மாணவர்களுக்கு புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்து கருத்தினை கூறுதல், யு.கே.ஜி மாணவர்களுக்கு எழுத்துக்களின் வரிசை என்ற தலைப்பிலும், முதலாம் வகுப்பு மணாவர்களுக்கு ஒரே ஓசையுடைய சொற்கள் என்ற தலைப்பிலும், 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்திதாளில் உள்ள செய்திகளை சேகரித்தல் என்ற தலைப்பிலும், 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பு என்ற தலைப்பிலும், 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு கையெழுத்து போட்டியும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதையை புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பிலும், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் புத்தகம் என்ற தலைப்பில் ஆங்கில பேச்சு போட்டியும் நடைபெற்றது. 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் எழுத்தாளர் என்ற தலைப்பில் தமிழ் பேச்சு போட்டியும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் நூல் ஆசிரியரின் பெயர்கள் என்ற தலைப்பில் வினாடி-வினாவும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் நமது நண்பர்கள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.
- தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் போன்றவவை வழங்கப்பட்டது.
- 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் காமராஜர் வேடம் அணிந்து அணிவகுத்து சென்றனர்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார். முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவர் நரேன் வரவேற்று பேசினார். மாணவர் கோதண்டராமன் காமராஜர் பற்றிய கவிதைகளை வாசித்தார். மாணவர் தேவேஷ் காளிதாஸ் பொற்காலம் தந்த பெருந்தலைவர் காமராசர் என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் கற்பலகை எழுத்துக்கள் வடிவியல் பெட்டி உபகரணங்கள் போன்றவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மழலையர் பிரிவு மாணவர்கள் காமராஜர் போல் வேடம் அணிந்து காமராஜரை நினைவுபடுத்தும் வகையில் அணிவகுத்து சென்றனர். சிறப்பு விருந்தினராக மாணவர் ஜெயதர்சன் கலந்துகொண்டு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளைப் பற்றியும் காமராஜரின் கல்விப் பணியை பற்றியும் உரையாற்றினார். முடிவில் மாணவி சைனி ப்ரீத்தி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் இயக்குனர் ராதாபிரியா மற்றும் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
- பள்ளி முதல்வர் பாலசுந்தர் புத்தக கழகச் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.
- வினாடி-வினா கழக செயல்பாட்டினை தேவி ஸ்ரீ குழுவினர் காட்சிப்படுத்தினர்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் புத்தககழக செயல்பாடு தொடக்க விழா நடைபெற்றது. பாரத் கல்விக் குழுமத்தின் செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியை சுமதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் கலந்து கொண்டார். சுபாஷினி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பாலசுந்தர் புத்தக கழகச் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். மாணவி காளிபிரியா குழுவினர் ஆங்கில கழக செயல்பாடு குறித்தும், ஸ்ரீவானி குழுவினர் கலைக்கழக செயல்பாடு குறித்தும், அனுபாமா அறிவியல்கழக செயல்பாடு, காயத்ரி கணிதகழகச் செயல்பாடு குறித்தும், வினாடி வினா கழக செயல்பாட்டினை தேவி ஸ்ரீ குழுவினரும் காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளுக்கு ஆர்வமூட்டல் காணொளி திரையிடப்பட்டது. பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஒவ்வொரு கழக செயல்பாட்டின் முக்கியத்துவம் நன்மைகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியை மிருதுளா ஜெனனி தொகுத்து வழங்கினார். முடிவில் ஆஹிலா நன்றி கூறினார். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்