search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவேங்கடம்"

    • தொடர்புடனைய கைதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    சென்னையில் கடந்த 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை வழக்கில் கைதான 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஒருவரான திருவேங்கடம் நேற்று காலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    விசாரணையின் போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதற்கு போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் திருவேங்கடம் சம்பவ இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் அதில் தொடர்புடனைய கைதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி இருக்கும் பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

    • உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டார்.
    • பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் இன்று போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற, மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.

    செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.

    வாகனத்தை நிறுத்தியபோது பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடினார்.

    உடனடியாக பாதுகாவலராக சென்ற காவலர்கள் திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை.

    வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.

    உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டார்.

    காயமடைந்த திருவேங்கடம் உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    M3 புழல் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக முதல் தகவல் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை.
    • ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

        பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த எதிரிகள் காவல்துறை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே, அவர்களில் சிலர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற ஐயம் எழுந்தது. திருவேங்கடம் சுட்டு கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அந்த ஐயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மிக முக்கிய கொலை வழக்கில் சரணடைந்த எதிரியை அதிகாலை நேரத்தில் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அழைத்துச் செல்ல எந்த தேவையும் இல்லை.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடத்தை சுட்டுக்கொலை செய்திருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

    இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைய அனுமதித்துவிட்டு ஓரிரு ரவுடிகளை காவல்துறை மூலம் சுட்டுக்கொலை செய்வதன் வாயிலாக, சட்டம் - ஒழுங்கு சீரடைந்து விட்டதாக காட்ட முயல்வது மிக மோசமான அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

    திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்மம் வலுவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. இது தொடர்பாக எழுந்துள்ள ஐயங்களை அரசுதான் போக்க வேண்டும்.

    அதற்காக திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே நான் வலியுறுத்தியவாறு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்

    • சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவத்தில் 11 பேரை செம்பியம் காவல்துறையினர் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்களில் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சென்னை புழல் பகுதியில் இன்று அதிகாலையில் நடந்த பரபரப்பான என்கவுண்டர் பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னை மாநகரில் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிரபல ரவுடியும் கூலிப்படை தலைவனுமான ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்து வதற்காகவே 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் குன்றத்தூரை சேர்ந்த பிரபல ரவுடியான திருவேங்கடம் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட் டிருந்தார்.

    கடந்த 11-ந் தேதி முதல் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இவர்களில் ரவுடி திருவேங்கடத்திடம் போலீசார் பரங்கிலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் பல தகவல்களை திரட்டுவதற்காக இன்று காலையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக் டர் சரவணன் மற்றும் போலீசார் திருவேங்கடத்தை வேனில் அழைத்துச் சென்றனர். மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே சென்று கொண்டிருந் தற்போது ரவுடி திருவேங்கடம் திடீரென போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.

    உடனடியாக போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய திருவேங்கடத்தை விரட்டிச் சென்றனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து ரவுடி திருவேங்கடத்தை பிடிக்க தண்டையார் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் திருவேங்கடம் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதி காலி இடங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். அங்கு தகர சீட்டால் அமைக்கப்பட்டிருந்த கொட்டகை யில் திருவேங்கடம் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கொட்டகையை சுற்றி வளைத்த போலீசார் திருவேங்கடத்திடம் சரணடையுமாறு கூறினார்கள்.

    ஆனால் திருவேங்கடமோ, கொட்டகையில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீசார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் இருந்து தப்பிய இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார்.

    இதில் ரவுடி திருவேங்கடம் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. வலது பக்க வயிறு, இடது பக்க மார்பு ஆகிய இரண்டு இடங்களில் பாய்ந்த குண்டுகள் திருவேங்கடத்தின் உடலை துளைத்தன. இதில் சுருண்டு விழுந்த திருவேங்கடத்தை போலீசார் காப்பாற்ற முயன்றனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு திருவேங்கடத்தை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திருவேங்கடம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து திருவேங்கடத்தின் உடல் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த என்கவுண்டர் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான 11 பேரில் ஒரு ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டு விட்ட நிலையில் மற்ற 10 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவர்களின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைகிறது. பின்னர் 10 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள். என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடசென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர், இணை கமிஷனர் விஜயகுமார், கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டிய ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    என்கவுண்டர் நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவேங்கடம் போலீசாரை துப்பாக்கியால் சுடுவதற்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

    மற்ற கொலையாளிகளும் இது போன்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எங்கேயாவது பதுக்கி வைத்துள்ளார்களா? என்பது பற்றிய விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் நடந்துள்ள இந்த என்கவுண்டர் சம்பவம் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுக்கூட்டத்திற்கு கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் வி.பி.மூர்த்தி துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மதுரை மண்டல துணைச் செயலாளர் சிவானந்த், பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா பாண்டியன் தொகுப்புரையாற்றினார். மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, கலை இலக்கியப் பிரிவு துணைச் செயலாளர் நாஞ்சில் அன்பழகன் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வாசுதேவன், செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் தலைமையில் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • விற்பனை நிலையங்களில் இருந்து விதை மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    2022-23 பிசான பருவத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதி விதை விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகள் வரப்பெற்றுள்ளது.

    வள்ளியூர் விதை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், நெல்லை விதை ஆய்வாளர் ஜெயசுதா, தென்காசி விதை ஆய்வாளர் சண்முகையா, நாகர்கோவில் விதை ஆய்வாளர் கோமதி மற்றும் சங்கரன்கோவில் விதை ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட குழுவினர் விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் தலைமையில் திருவேங்கடம், கலிங்கப்பட்டி, குலசேகரப்பேரி, ஆலமநாயக்கர்பட்டி, அ.கரிசல்குளம் மற்றும் மைப்பாறை பகுதியில் உள்ள 14 விதை விற்பனை நிலையங்களில் கடந்த 12-ந்தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது விதை கொள்முதல் பட்டியல், ரகம், பதிவுச்சான்று மற்றும் குவியல் முளைப்புத்திறன் பரிசோதனை அறிக்கை ஆகியன சரிபார்க்கப்பட்டது. மேற்படி ஆவணங்கள் பெறப்படாத ரூ.12,19,000 மதிப்பிலான 19 மக்காச்சோளம் விதைகள் மற்றும் பருத்தி விதை குவியல்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை நிலையங்களில் இருந்து 127 மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகளில் அலுவலக விதை மாதிரி எடுக்கப்பட்டு முளைப்புத்திறன் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விதை ரகம், காலாவதி நாள், பயிரிட ஏற்ற பருவம் ஆகிய விபரங்களை விதை பொட்டலங்களின் விபர அட்டையில் சரிபார்த்து பின், உரிய ரசீது பெற்று, தரமான விதைகளை வாங்கி பயன்பெறுமாறு நெல்லை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×