என் மலர்
நீங்கள் தேடியது "நாராயண சுவாமி கோவில்"
- நாளை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது
- விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை (18-ந்தேதி) தொடங்குகிறது.
நாளை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், பகல் 12 மணிக்கு பணிவிடையும், உச்சி படிப்பும், மாலை 6 மணிக்கு பணிவிடையும், உகபடிப்பும், இரவு 8 மணிக்கு முகிலன்விளை பிரம்ம சக்தி அம்மன் பஜனை குழுவினரின் பஜனையும், நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடையும், உகபடிப்பும், கிருஷ்ணன் பிறப்பும், திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (19-ந்தேதி) வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணி விடையும், உகப்படிப்பும், 8 மணிக்கு நாதஸ்வர இசையும், பகல் 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும் மாலை 5 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும், 6 மணிக்கு அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 8 மணிக்கு சிறுவர், சிறுமியருக்கான கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் தங்ககிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.