என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊருக்குள்"

    • இரவு நேர ங்களில் காட்டு–ப்பன்றிகளின் கூட்டம் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயங்கர சத்தத்துடன் சென்று வருகிறது.
    • காட்டுப்பன்றி கூட்டத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாதுகாப்பை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நகலூர் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ெபாதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேர ங்களில் காட்டு–ப்பன்றிகளின் கூட்டம் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயங்கர சத்தத்துடன் சென்று வருகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்பட்டு அச்சத்தோடு இருந்து வரு கிறார்கள்.

    இதனால் வீட்டின் கதவுகளை பொதுமக்கள் மூடி கொண்டு வெளியே வர தயங்குகின்றனர்.அந்தியூர் அருகே உள்ள நகலூரை யொட்டி உள்ள வனப்பகுதியான கொம்பு தூக்கி வனப்பகுதியில் இருந்து இந்த காட்டுப் பன்றிகள் ெவளியேறி அருகே உள்ள ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு பன்றிகள் பெருமாள் பாளையம், முனியப்பன் பாளையம், ஈச்சப்பாறை உள்ளிட்ட பகுதியில் உள்ள கரும்பு தோட்டங்களில் பகல் நேரங்களில் தங்கி விடுகிறது. அவை இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக நகலூர் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    எனவே நகலூர் பகுதியில் ஊருக்குள் வரும் காட்டுப்பன்றி கூட்டத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாதுகாப்பை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×