என் மலர்
முகப்பு » ரூ.1.32 கோடி
நீங்கள் தேடியது "ரூ.1.32 கோடி"
- ரெயில் நிலையங்களிலும் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- இதில் எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில்களில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சேலம்:
ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில்களில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கடந்த ஜூலை மாதத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள், அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட 18 ஆயிரத்து 860 பேர் சிக்கினர். இவர்கள் மீது ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
×
X